தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை; மேல்முறையீடு செய்வோம்! சன்னி வஃக்பு வாரியம்

சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து அமைப்புகளுக்குச் சொந்தம் என்றும் அங்கே ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை; மேல்முறையீடு செய்வோம்! சன்னி வஃக்பு வாரியம்
ஜிலானி
  • News18
  • Last Updated: November 9, 2019, 12:06 PM IST
  • Share this:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்று சன்னி வஃக்பு வாரிய வழக்கறிஞர் ஷாபர்யாப் ஜிலானி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று வழங்கியது. அந்தத் தீர்ப்பில், ‘சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து அமைப்புகளுக்குச் சொந்தம் என்றும் அங்கே ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், சன்னி வஃக்பு வாரியத்துக்கு ஐந்து ஏக்கர் அளவில் மாற்று இடம் வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சன்னி வஃக்பு வாரியத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஷாபர்யாப் ஜிலானி, ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், தீர்ப்பு திருப்தியளிக்கவில்லை. தீர்ப்பு மீது மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.


அந்த ஐந்து ஏக்கர் நிலம் எங்களுக்கு பயன்றறது. அதற்காக, எந்த இடத்திலும் எந்த வகையான போராட்டங்களும் இருக்கக் கூடாது. தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாக கருதக் கூடாது’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்