பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள்
காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர், இன்று
பாஜகவில் இணைந்தார்.
இதுதொடர்பாக ஜாகருக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, காங்கிரஸில் இருந்து ஜாகர் விலகியதில் இருந்து அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும், அவருக்கு பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பி பதவி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, 2024 பஞ்சாப் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக பஞ்சாபில் தனது கால் தடத்தை ஆழமாக ஊன்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜாகருக்கு பஞ்சாப் பாஜகவில் முக்கிய கட்சி பொறுப்பும் வழங்கப்பட உள்ளதாகவும், அதேபோல், காங்கிரஸில் அதிருப்தியில் உள்ளவர்களை பாஜகவுக்கு அழைத்து வருவதற்கு அவர் உறுதுணையாக இருப்பார் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை, ஜாகர் கடுமையாக விமர்சித்திருந்தார். இதைத்தொடர்ந்து, அவர் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் காங்கிரஸ் தலைமை ஜாகரை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்க முடிவு செய்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதையும் படிங்க: புதுச்சேரி ஹோட்டலில் கெட்டுப் போன சிக்கன்.. எச்சரித்து சென்ற அதிகாரிகள்
இதைத்தொடர்ந்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டு சில வாரங்களுக்கு பின்னர் அவர் கட்சியில் இருந்து விலகினார். பின்னர் கடந்த சனிக்கிழமையன்று பேஸ்புக் நேரலையில் பேசிய ஜாகர், “குட் பை அண்ட் குட்லக் காங்கிரஸ்” என்று கூறி தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்த கட்சியினரை கடுமையாக விமர்சித்தார்.
மேலும், ராகுல் காந்திக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார். அப்போது, நண்பனுக்கும் எதிரிக்கும் இடையேயான வேறுபாடை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை கையில் எடுத்துக்கொள்ளுமாறு மற்ற சகாக்களிடமிருந்து விலகி இருக்குமாறும் அவர் ராகுலை கேட்டுக்கொண்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.