Home /News /national /

சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு

சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு

சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா

சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோ சாப்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெல்லா ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    கலை, அரசியல், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாதனைகளைப் படைத்து சமூகத்தில் மதிப்பிற்குரியவராக திகழ்பவர்களுக்கு இந்திய அரசால் பத்ம விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகள் இதுவாகும். இதில், பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, பத்ம விபூஷன் விருது நான்கு பேருக்கும், பத்ம பூஷன் விருது 17 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 107 பேருக்கும் அறிவக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சாதனைகளைப் புரிந்ததற்காக தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவுக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசியல் துறையில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியத்துக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Sundar pichai

    அடுத்த செய்தி