ஹோம் /நியூஸ் /இந்தியா /

இமாச்சலப் பிரதேசத்தின் 15ஆவது முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு பதவியேற்பு

இமாச்சலப் பிரதேசத்தின் 15ஆவது முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு பதவியேற்பு

இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக சுக்விந்தர் சுக்கு பதவியேற்பு

இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக சுக்விந்தர் சுக்கு பதவியேற்பு

பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Himachal Pradesh, India

இமாச்சலப் பிரதேசத்தின் 15ஆவது முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு இன்று பதவியேற்றுக் கொண்டார். இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் அந்த கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. ஆட்சியை இழந்த பாஜகவுக்கு 25 தொகுதி கிடைத்தது.

இந்த மாநிலத்தில் இரு கட்சிகளும் முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் தேர்தலை எதிர்கொண்டது. ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதலமைச்சர் வீர்பத்திர சிங்கின் மனைவி பிரதீபா சிங் மற்றும் சுக்விந்தர் சிங் சுக்கு ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக, காங்கிரஸ் கட்சி மேலிடம் புதிய முதலமைச்சாரக சுக்விந்தர் சிங் சுக்குவை தேர்வு செய்தது.

இதன் அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.

மாநிலத்தின் 15ஆவது முதலமைச்சாரக பதவியேற்கும் 58 வயதான சுக்குவுக்கு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் பதவிப் பிரமானம் மற்றும் ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைத்தார். அத்துடன் மாநிலத்தின் துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்றுள்ளார்.

First published:

Tags: Congress, Himachal CM, Himachal Pradesh