சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சிக்கு 60 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் உள்ள உயர் அதிகாரக் குழு சுகேஷின் அறிக்கையை எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியதாக அவரது வழக்கறிஞர், அனந்த் மாலிக் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பல்வேறு முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகளிடம் மிரட்டி பணம் பறித்த வழக்குளில் சிக்கிய சுகேஷ் 200 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் கொலை மிரட்டல் காரணமாக தனது சிறையை மாற்றுமாறு அவர் பலமுறை கோரிக்கை விடுத்ததை அடுத்து அவர் தற்போது டெல்லியில் உள்ள மண்டோலி சிறைக்கு மாற்றப்பட்டார். நேற்று பண மோசடி வழக்கின் டெல்லி வந்த சுகேஷ் தான் ஆம் ஆத்மி கட்சிக்கு 60 கோடி ரூபாய் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : காலையில் கடத்தல்.. மாலையில் திருமணம்.. காதலர்கள் போட்ட பக்கா ஸ்கெட்ச்!
முன்னதாக, டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், பணமோசடி வழக்கில் சிறையில் உள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு 'பாதுகாப்பு பணமாக' ரூ.10 கோடி கொடுத்ததாகவும், அதோடு ஆம் ஆத்மி கட்சிக்கு ராஜ்யசபா சீட்டுக்காக ரூ.50 கோடி வழங்கியதாக சுகேஷ் சமீபத்தில் கூறியுள்ளார்.
அதோடு டெல்லியின் துணை அமைச்சர் மணீஷ் சிசோடியா குழந்தைகளின் கல்வி நலனுக்காக கொடுக்கும் பணத்தை பணத்தை மோசடி செய்ததாக சுகேஷ் குற்றம் சாட்டினார்.மேலும் முன்னர் தலைமை சிறைத்துறை இயக்குநராக இருந்த சந்தீப் கோயலுக்கு ₹ 12.50 கோடி கொடுத்ததாக கூடுதல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
சுகேஷின் குற்றாச்சாட்டுகளை குறிப்பிட்டு ஒரு உயர் அதிகாரம் கொண்ட குழு இந்த அறிக்கையை எடுத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர் ஆனந்த் மாலிக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : திருப்பதி: தொழிலதிபர் சேகர் ரெட்டியின் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை மரணம்.!
ஜெயின் மற்றும் பிறருக்கு எதிரான சுகேஷ் சந்திரசேகரின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட முதன்மைச் செயலாளர் (உள்துறை) தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு, குற்றச்சாட்டுகள் "தீவிரமானது" என்று கண்டறிந்து, ஒரு சிறப்பு குழுவை விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. விசாரணையின் போது, குழு சந்திரசேகர் மற்றும் வழக்கை விசாரிக்கும் ED மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அதிகாரிகளை சந்தித்தது.
அப்போது சுகேஷ் , “4 தவணைகளில் அசோலா மைன்ஸில் உள்ள டெல்லியின் போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட்டின் பண்ணை வீட்டில் சத்யேந்தர் ஜெயினுக்கு 50 கோடி ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த நிதி பரிவர்த்தனைகளைப் பொருத்தவரை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முழுமையாக சம்பத்தப்பட்டுள்ளார்.
2017ல் முழுத் தொகையான ₹ 50 கோடியை நான் மாற்றியவுடன், பிகாஜி காமா பிளேஸ் ஹயாட் ரீஜென்சியில் நான் நடத்திய இரவு விருந்தில் ஜெயின் மற்றும் கஹ்லோட்டுடன் முதல்வர் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார்.” என்று விளக்கியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.