ஹோம் /நியூஸ் /இந்தியா /

நான் சொன்னது பொய்யா இருந்தா தூக்கிலிடுங்க - லெட்டரில் அதிர வைத்த சுகேஷ் சந்திரசேகர்! ஷாக்கில் ஆம் ஆத்மி!

நான் சொன்னது பொய்யா இருந்தா தூக்கிலிடுங்க - லெட்டரில் அதிர வைத்த சுகேஷ் சந்திரசேகர்! ஷாக்கில் ஆம் ஆத்மி!

சுகேஷ் சந்திரசேகர்

சுகேஷ் சந்திரசேகர்

Sukesh chandrashekhar | தனது முந்தைய புகாரில் உண்மை இல்லை என்றால் ஏன் சிறை நிர்வாகம் என்னை வாபஸ் பெற சொல்லி வற்புறுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  ஆம் ஆத்மி கட்சி மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யாக இருந்தால் என்னை தூக்கிலிடுங்கள் என சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஆம் ஆத்மிக்கு எதிரான சிபிஐ விசாரணை நடத்த உடனடியாக உத்தரவிடுமாறு துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் கடிதம் மூலமாக வலியுறுத்தியிருந்தார்.

  இந்த கடிதத்தை தொர்ந்து, தனக்கு சிறையில் நெருக்கடி அதிகரித்துள்ளதாக கூறிய அவர், புகாரை வாபஸ் பெற வற்புறுத்தி வருவதாக தெரிவித்தார்.

  இந்த நிலையில் நேற்று அவர் வெளியிட்டுள்ள மற்றொரு கடிதத்தில், ஆம் ஆத்மி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பொய்யானால் என்னை தூக்கிலிடுங்கள். அதே நேரத்தில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் முதலமைச்சர் அவரது பதவியை ராஜினாமா செய்வாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சுகேஷின் இந்த கடித விவகாரம் ஆம் ஆத்மி வட்டாரத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது

  மேலும், நான் அமைதியாக இருந்தேன், எல்லாவற்றையும் புறக்கணித்தேன், ஆனால் உங்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் சிறை நிர்வாகம், அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரது அச்சுறுத்தல்கள் என்னை திசை திருப்பிவிட்டிருக்கின்றன என்றும், தனது முந்தைய புகாரில் உண்மை இல்லை என்றால் ஏன் சிறை நிர்வாகம் என்னை வாபஸ் பெற சொல்லி வற்புறுத்துகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Aam Aadmi Party