Home /News /national /

நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க மட்டும் ரூ.20 கோடி சுகேஷ் செலவு:  ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூருக்கும் ரூட் விட்டது அம்பலம்!!..

நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க மட்டும் ரூ.20 கோடி சுகேஷ் செலவு:  ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூருக்கும் ரூட் விட்டது அம்பலம்!!..

சுகேஷ் சந்திரசேகர்

சுகேஷ் சந்திரசேகர்

முக்கியமான சில நடிகைகளுக்கும் தூது விட்டுள்ளார் குறிப்பாக பூமி பெட்னேகர், சாரா அலிகான் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
மோசடி வழக்குகளில் சிறையில் இருக்கும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் நடிகைகளுக்கு மட்டும் ரூ. 20 கோடி வரை செலவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மோசடி வழக்குகளில் சிக்கி நாடு முழுவதும் பிரபலமானவர் சுகேஷ் சந்திரசேகர். இரட்டை இலை சின்னம் பெற்று தர லஞ்சம் உள்ளிட்ட 15 முக்கிய மோசடி வழக்குகள் சுகேஷ் சந்திர சேகர் மீது உள்ளது. இந்த நிலையில் தான் இரட்டை இலை வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருந்தபோதே தொழில் அதிபர் ஒருவருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 மோசடி செய்த  வழக்கில் மிகவும் பிரபலமானர்.

இந்த நிலையில் மோசடி செய்யும் பணத்தை வைத்து நடிகைகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார் சுகேஷ் சந்திர சேகர்.  இளம் நடிகைகள் மற்றும் மாடலிங் பெண்கள் மீது சுகேஷ் சந்திரசேகர் அதிக விருப்பம் கொண்டுள்ளார். பிங்கி இரானி மூலம் சுகேசுடன் அறிமுகம் ஆன நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், 2 கார்கள், ஏராளமான விலையுயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் பணத்தை அவரிடம் இருந்து பெற்றிருக்கிறார். சுகேசை அவர் மிகவும் விரும்பியதாக தெரிகிறது.

அவரை திருமணம் செய்துகொள்ளவும் ஆசைப்பட்டிருக்கிறார். அதனால்தான் சுகேஷ் மோசடி நபர் என தெரிந்தும் கூடவே இருந்திருக்கிறார் என போலீசார் தெரிவித்துள்ளனர். சுகேசும் ஜாக்குலினை மிகவும் நம்பி பழகியுள்ளார். ஜாக்குலினின் மேலாளருக்கு அவர் ரூ.8 லட்சம் மதிப்புள்ள டுகாட்டி மோட்டார் சைக்கிளை பரிசாக கொடுத்ததாகவும் அமலாக்க அறிக்கையில் கூறப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: வாய்தா பட நடிகை தற்கொலை - காதல் தோல்வியால் நேர்ந்த விபரீதம்!

இந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகேஷ், முக்கியமான சில நடிகைகளுக்கும் தூது விட்டுள்ளார் குறிப்பாக பூமி பெட்னேகர், சாரா அலிகான் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கும் அழைப்பு விடுத்துப் பார்த்துள்ளார்.

இருப்பினும் ஜான்வி கபூர் சிக்கவில்லை என கூறப்படுகிறது. ஒரு சிலர் பரிசுப்பொருட்களை பெற்றதோடு நிறுத்திக்கொண்டுள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு சுகேஷ் சந்திரசேகர் நடிகைகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்தி ரூ.20 கோடிக்கும் மேல் பணம் செலவழித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வழக்கில் பல அதிர்ச்சியுட்டும் தகவல்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Published by:Arunkumar A
First published:

Tags: Bollywood actress, Fraud

அடுத்த செய்தி