ஹோம் /நியூஸ் /இந்தியா /

கொரோனாவுக்கும் அதிகரிக்கும் திடீர் மாரடைப்புகளுக்கும் தொடர்புண்டா? - ஆய்வு நடத்தும் ஐசிஎம்ஆர்!

கொரோனாவுக்கும் அதிகரிக்கும் திடீர் மாரடைப்புகளுக்கும் தொடர்புண்டா? - ஆய்வு நடத்தும் ஐசிஎம்ஆர்!

இதயநோய் வரலாறு அல்லது மற்ற எந்த காரணிகளும் இல்லாமல் இளம் வயதில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு ஆய்வுக் குழுவினர் உட்படுத்தினர்

இதயநோய் வரலாறு அல்லது மற்ற எந்த காரணிகளும் இல்லாமல் இளம் வயதில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு ஆய்வுக் குழுவினர் உட்படுத்தினர்

இதயநோய் வரலாறு அல்லது மற்ற எந்த காரணிகளும் இல்லாமல் இளம் வயதில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு ஆய்வுக் குழுவினர் உட்படுத்தினர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

திடீரென அதிகரிக்கும் மாரடைப்புகளுக்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்தும், அதில் கொரோனாவுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இளம் வயதைச் சேர்ந்த பலர் நடந்து செல்லும்போது, நடனமாடிக்கொண்டிருக்கும்போது,  உடற்பயிற்சியில் ஈடுபடும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம். கொரோனா பரவத் தொடங்கிய பிறகுதான் இளம் வயதினருக்கான மாரடைப்பு அதிகரிக்கத் தொடங்கியதாகவும் தகவல்கள் உலா வந்தன.

இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. திடீரென அதிகரிக்கும் மாரடைப்புகளுக்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்தும், அதில் கொரோனாவுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது பற்றிய ஆய்வு அது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறுகையில், “திடீர் மாரடைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து நிறைய தவறான தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. மாரடைப்புக்கு கொரோனாவும், கொரோனா தடுப்பூசியும்தான் காரணம் என பலர் கருதினர். ஆகவே, மாரடைப்பு ஏற்படுவதற்கு உண்மையில் அதுதான் காரணமா என கண்டுபிடிக்கவே இந்த சோதனை” என்றார்.

மாரடைப்பு ஏற்பட்ட நபரிடம் இருந்த அறிகுறிகள் மற்றும் அவர் இறந்த சூழல்கள் குறித்த தகவல்களை ஆய்வுக் குழுவினர் சேகரித்தனர். இதுபோலவே இதயநோய் வரலாறு அல்லது மற்ற எந்த காரணிகளும் இல்லாமல் இளம் வயதில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு ஆய்வுக் குழுவினர் உட்படுத்தினர்.

உயிரிழப்புகள் தொடர்பான ஒரு முடிவு வர இது தங்களுக்கு உதவியதாக தெரிவித்த ஆய்வுக் குழுவினர், சிலருக்கு இதய நோய் குடும்பம் சார்ந்து பின்னணியில் இருந்து வந்ததாக அறியப்படுகிறது” என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைபட்டால் மாரடைப்பு ஏற்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. இது ஒரு ரத்த சுழற்சி சார்ந்த பிரச்னை. திடீரென ஏற்படும் மாரடைப்புக்கு electrical பிரச்னை காரணமாக இருக்கலாம் அமெரிக்க இதயவியல் சங்கம் கூறுகிறது.

தங்கள் வயது அல்லது பிட்னஸ் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நெஞ்சுவலி போன்ற இதயம் சார்ந்த அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். அத்துடன், குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்துகொள்வது, இதயம் சார்ந்த கோளாறுகள் ஏற்படுவதை முன்கூட்டியே தடுத்து நிறுத்தும் என்று ஆய்வுக் குழுவிலுள்ள மூத்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

First published:

Tags: Cardiac Arrest, Covid-19, Heart attack