ஒடிசா கடற்கரையில் கம்பீரக் காட்சி தரும் திருவள்ளுவர் - சுதர்சன் பட்நாயக்கின் கண்ணைக் கவரும் மணற்சிற்பம்

திருவள்ளுவர் மணற்சிற்பம்

திருவள்ளுர் தினத்தை முன்னிட்டு புகழ்பெற்ற மணற் சிற்பக் கலைஞர் நவின் பட்நாயக் கடற்கரை மணலில் திருவள்ளுவர் படத்தை உருவாக்கியுள்ளார்.

 • Share this:
  நாடு கடந்து வாழும் தமிழ்ரகளால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிந்துவிடுதல்ல. தை 1-ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறளைக் கொடுத்த திருவள்ளுவரை தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடிவருகிறது. இதுவரையில், திருக்குறள் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன. அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  இந்தநிலையில், ஒடிசாவைச் சேர்ந்த புகழ்பெற்ற மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் திருவள்ளுவரின் உருவத்தை மணற்சிற்பமாக உருவாக்கியுள்ளார். அந்த மணற்சிற்பத்தை பலரும் கண்டு ரசித்துவருகின்றனர். கருணாநிதிக்கும் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் உருவாக்கியுள்ளார். அவர், தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வுக்காகவும் மணற்சிற்பத்தை பயன்படுத்திவருகிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: