வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப் -10 ராக்கெட்

ஜி.எஸ்.எல்.வி. எப் -10 ராக்கெட்

காலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

  • Share this:
    பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் இன்று காலை 5.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது.

    இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல் மற்றும் பேரிடர் எச்சரிக்கை, ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக 'ஈ.ஓ.எஸ்.-03' (EOS-3) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது.

    இந்த செயற்கைகோள் 2,268 கிலோ எடை கொண்டது. இது ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் பொருத்தப்பட்டு இன்று காலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், கொரோனா பரவல் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    Must Read : மாநிலங்களவையில் கண் கலங்கிய வெங்கய்ய நாயுடு - பாட்டுப்பாடி எம்.பிக்கள் அமளி..

    இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, திட்டமிட்டபடி ராக்கெட்டை விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதிநவீன மற்றும் சுறுசுறுப்பான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: