ஹோம் /நியூஸ் /இந்தியா /

“தமிழ்நாடு என்பது தமிழர்களுக்கானது அல்ல..” - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

“தமிழ்நாடு என்பது தமிழர்களுக்கானது அல்ல..” - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

சுப்பிரமணியன் சுவாமி, ஆர்.என்.ரவி

சுப்பிரமணியன் சுவாமி, ஆர்.என்.ரவி

இதற்கு தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு என்பது தமிழை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு மட்டுமானது அல்ல எனவும் கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்தை வரவேற்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகள் பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகையில் அவர் பேசிய கருத்து தற்போது ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது. ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் எனப் பேசினார். ஆளுநர் ரவியின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, வைகோ, கனிமொழி, அமைச்சர் உதயநிதி,  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, “கவர்னர் ஆர்.என்.ரவியை ஆதரிக்கிறோம். தமிழ்நாடு என்பது தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு மட்டுமானது அல்ல. ஏனென்றால் இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான் உள்ளது. திராவிடம் என்பது ஆதிகம் பயன்படுத்திய சமஸ்கிருத சொல். ஆரிய புரட்டு பிரிட்டிஷ்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று” என குறிப்பிட்டிருந்தார்.

First published:

Tags: RN Ravi, Subramanian Swamy, Tamilnadu