• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாஜகவிலிருந்து விலகும் சுப்பிரமணியன் சுவாமி? மம்தாவை புகழ்ந்து ட்வீட்

பாஜகவிலிருந்து விலகும் சுப்பிரமணியன் சுவாமி? மம்தாவை புகழ்ந்து ட்வீட்

மம்தா பானர்ஜி-சுப்பிரமணியன் சுவாமி

மம்தா பானர்ஜி-சுப்பிரமணியன் சுவாமி

பெருந்தலைவர்கள் என்ன சொன்னார்களோ அது அர்த்தம் நிரம்பியது, அர்த்தம் நிரம்பியதுதான் அவர்கள் சொல்லாகவே இருந்தது என்று மம்தாவை அவர்களுடன் ஒரே தராசில் நிறுத்தி புகழ்ந்து தள்ளியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

  • Share this:
    பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லியில் இன்று மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். பேசிய பிறகு தன் சமூக ஊடகப்பக்கத்தில் மம்தா பானர்ஜியை புகழ்ந்து தள்ளி உள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

    பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி அண்மை காலமாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். பாஜகவின் தேசிய செயற்குழுவில் இருந்து கடந்த மாதம் சுப்பிரமணியம் சுவாமி நீக்கப்பட்டார். இதையடுத்து தனது ட்விட்டர் பயோவில் பாஜக என்பதை அவர் நீக்கினார். மேலும், வேளாண் சட்டம், சீனா எல்லை ஆக்கிரமிப்பு போன்றவை என மத்திய அரசுக்கு எதிரான அவரது விமர்சனம் அதிகரித்தது.

    இன்று காலை மம்தா பானர்ஜியை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து பேசினார். பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களும் பிரபலங்களும் மம்தாபானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவரும் சூழலில் சுப்பிரமணியன் சுவாமியும் அவரது கட்சியில் இணைய கூடுமோ என்ற சந்தேகத்தை இந்த சந்திப்பு ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘நான் ஏற்கனவே அவருடன் (மம்தா) இருக்கிறேன். எனவே அவரது கட்சியில் இணைய வேண்டிய அவசியம் இல்லை என்று சுப்பிரமணியன் சுவாமி பதில் அளித்தார்.

    இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கூறியுள்ளார்:



    அதாவது இந்திய தேசக்கட்டுமானத்தின் முக்கியத் தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், ராஜிவ் காந்தி, சந்திரசேகர், பி.வி.நரசிம்ம ராவ் ஆகியோருடன் ஒப்பிட்டு இவர்களெல்லாம் சொல்வதை வாழ்ந்தனர், அதாவது இவர்களிடத்தில் சொல்லுக்கும் பொருளுக்கும் முரண் இருந்ததில்லை, இது பெரிய அரிய குணம் என்று பாராட்டியுள்ளார்.

    அதாவது அந்தப் பெருந்தலைவர்கள் என்ன சொன்னார்களோ அது அர்த்தம் நிரம்பியது, அர்த்தம் நிரம்பியதுதான் அவர்கள் சொல்லாகவே இருந்தது என்று மம்தாவை அவர்களுடன் ஒரே தராசில் நிறுத்தி புகழ்ந்து தள்ளியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: