• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மம்தா பானர்ஜியுடன் சந்திப்பு... திரிணாமுல் காங்கிரஸில் சேர முடிவு? சுப்பிரமணியன் சுவாமி பதில் என்ன?

மம்தா பானர்ஜியுடன் சந்திப்பு... திரிணாமுல் காங்கிரஸில் சேர முடிவு? சுப்பிரமணியன் சுவாமி பதில் என்ன?

மம்தா பானர்ஜி- சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு

மம்தா பானர்ஜி- சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு

மம்தா பானர்ஜி உடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘நான் ஏற்கனவே அவருடன் (மம்தா) இருக்கிறேன். எனவே அவரது கட்சியில் இணைய வேண்டிய அவசியம் இல்லை என்று சுப்பிரமணியன் சுவாமி பதில் அளித்தார்.

  • Share this:
    பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லியில் இன்று மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். திரிணாமுல் காங்கிரஸில் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு தான் ஏற்கனவே மம்தாவுடன் இருப்பதாகவும் அவரது கட்சியில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்றும் பதில் அளித்தார்.

    பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி அண்மை காலமாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். பாஜகவின் தேசிய செயற்குழுவில் இருந்து கடந்த மாதம் சுப்பிரமணியம் சுவாமி நீக்கப்பட்டார். இதையடுத்து தனது ட்விட்டர் பயோவில் பாஜக என்பதை அவர் நீக்கினார். மேலும், வேளாண் சட்டம், சீனா எல்லை ஆக்கிரமிப்பு போன்றவை என மத்திய அரசுக்கு எதிரான அவரது விமர்சனம் அதிகரித்தது.

    இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரும்   திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி  4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை மம்தா பானர்ஜியை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து பேசினார். பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களும் பிரபலங்களும் மம்தாபானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவரும் சூழலில் சுப்பிரமணியன் சுவாமியும் அவரது கட்சியில் இணைக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தை இந்த சந்திப்பு ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘நான் ஏற்கனவே அவருடன் (மம்தா) இருக்கிறேன். எனவே அவரது கட்சியில் இணைய வேண்டிய அவசியம் இல்லை என்று சுப்பிரமணியன் சுவாமி பதில் அளித்தார். இந்த சந்திப்பு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: