”நான் நிறைய புக்ஸ் எழுதியிருக்கேன்; நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே...!” சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி

 • News18
 • Last Updated :
 • Share this:
  சட்டத்தின் அடிப்படையில் என்கவுண்டர் தவறு, எனினும் அது தொடர்பாக முழுமையான விசாரணை தேவை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னையில் தெரிவித்துள்ளார்.

  பாஜக மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில் கூறியதாவது:-

  இந்திய தண்டணை சட்டத்தின் அடிப்படையில் என்கவுண்டர் தவறு. ஆனால், அதே நேரம் குற்றவாளிகள் ஆயுதங்களை வைத்து போலீசாரை தாக்க முயற்சி செய்து உள்ளனர் என்று கூறுகின்றனர். எனவே இதில் முழுனையான விசாரனை தேவை.

  வெங்காய விலை உயர்வு நம்முடைய தோல்வி தான். சரியான பொருளாதர கொள்கையை நாம் பின்பற்ற வில்லை. ஏற்கனவே நம் நாட்டு மக்களிடம் கையில் பணம் இல்லை.

  வருமான வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் அப்போது தான் பொருளாதர பிரச்சினைகள் சரி ஆகும் என்றார்.

  மத்திய அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்தி, இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்கலாம் என்ற கேள்விக்கு, “இதை நிர்மலா சீதாராமனை தான் கேட்க வேண்டும். நான் நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனை ஆகி வருகிறது. ஆனால், நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே?” என்றார்.

  சாமியார் நித்யானந்தா அமெரிக்காவில் தனி நாடு ஆரமித்தால் நமக்கு என்ன? அது அமெரிக்காவின் பிரச்சினை.

  அதிமுகவை வழிநடத்தும் திறமை சசிகலாவுக்கு உண்டு. தண்டனைக் காலம் முடிந்த பின்னர் அவருக்கு அந்த வாய்ப்பு உண்டு என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

  Also See...
  Published by:Sankar
  First published: