Home /News /national /

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? - நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? - நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி

தேசிய பாரம்பரிய சின்னம் அறிவிப்பது மத்திய அரசின் கொள்கை சார்ந்தது தானே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் முடிவெடுக்க முடியாது என மத்திய அரசு கூறுவதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

    ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பான மனுக்கள் அதிக பக்கங்கள் இருக்கிறது எனவும் எந்த மாதிரியான உத்தரவை எதிர்ப்பார்க்கிறீர்கள் என்பதை சுருக்கமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

    இதனையடுத்து சுப்பிரமணியன் சுவாமி தனது வாதத்தில், 2007ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ததாகவும், அதனை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என கோரியதன் அடிப்படையில், மனு தாக்கல் செய்ததாகவும் தெரிவித்தார்.

    Also read : நான் ராஜ்புத் வம்சத்தைச் சேர்ந்தவன்.. தலையே போனாலும் தலைவணங்க போவதில்லை - மணீஷ் சிசோடியா

    மேலும் இந்த விவகாரம் குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் தன்னை அழைத்து கருத்து கேட்டதாகவும் தெரிவித்தார்.

    இதனையடுத்து தேசிய பாரம்பரிய சின்னம் அறிவிப்பது மத்திய அரசின் கொள்கை சார்ந்தது தானே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் முடிவெடுக்க முடியாது என மத்திய அரசு கூறுவதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

    மேலும் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்நிலையில் இதுகுறித்து ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தரப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுக்கள் மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Subramanian Swamy, Supreme court

    அடுத்த செய்தி