இது மோடி அலை அல்ல... இந்துத்துவா அலை - சுப்பிரமணியன் சுவாமி

News18 Tamil
Updated: May 23, 2019, 4:07 PM IST
இது மோடி அலை அல்ல... இந்துத்துவா அலை - சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி
News18 Tamil
Updated: May 23, 2019, 4:07 PM IST
இது மோடி அலை அல்ல. இந்துத்துவா அலை என்று தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

2019 நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. வாக்குகள் எண்ணி இன்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

மதியம் 4 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 350 தொகுதிகளிலும், காங்கிரஸ் 90 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 102 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


தேர்தல் முடிவு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேட்டி ஒன்றில் கூறும்போது, ‘‘இது மோடி அலை அல்ல. இந்துத்துவா அலை’’ என்றார்.

மேலும் பார்க்க...

First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...