ஹோம் /நியூஸ் /இந்தியா /

விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளே தேர்தல் ஆணையராக அருண்கோயல் நியமனம்... ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளே தேர்தல் ஆணையராக அருண்கோயல் நியமனம்... ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

விருப்ப ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியான அருண் கோயல், மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக அரசியல் கட்சிகள் சந்தேகம் எழுப்பின.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமித்தது எப்படி? மற்றும் அவரை நியமித்ததற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  அண்மையில் விருப்ப ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியான அருண் கோயல், மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

  இதனிடையே தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முறையில் சீர்திருத்தம் செய்யக் கோரிய மனுக்களை, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

  இந்தநிலையில் இரண்டாவது நாளாக தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றது.

  அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் நடராஜ் ஆகியோர், அருண் கோயலின் நியமனத்தில் குறை கூற இயலாது என்று வாதிட்டனர்.

  இதையும் படிங்க: பேஸ்புக்கில் ஸ்கெட்ச்.. யூடியூப் தம்பதியினர் விரித்த வலையில் விழுந்த 68 வயது முதியவர்! கேரளாவில் மீண்டும் ஒரு ஹனி ட்ராப்!

  அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "தேர்தல் ஆணையரை நியமிக்கும் நடைமுறையில் சுதந்திரமான நடைமுறை தேவை" என்றனர்.

  அதற்காக ஒரு முன்மாதிரியான தேர்வு குழுவை உருவாக்குவது காலத்தின் தேவை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

  இதுவரை காலியாக இருந்த பதவிக்கு இந்த வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்றுவரும் போதே, தேர்தல் ஆணையரை நியமித்தது எப்படி? என்றும்,அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Chief Election Commissioner, Supreme court