ஹோம் /நியூஸ் /இந்தியா /

6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி - நிபுணர் குழு பரிந்துரை

6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி - நிபுணர் குழு பரிந்துரை

Covaxin

Covaxin

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரையிலான பிரிவினருக்கு செலுத்த துறை  ரீதியான நிபுணர் குழு (Subject Expert Committee (SEC) பரிந்துரை செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் சற்று அதிகரித்து வருவதை அடுத்து, குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியா தீவிரபடுத்தி வருகிறது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்த துறை  ரீதியான நிபுணர் குழு (Subject Expert Committee (SEC), இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு பரிந்துரை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, கடந்த ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் துறை ரீதியான நிபுணர் குழு ஆலோசனை மேற்கொண்டதை நியூஸ் 18 செய்தி தளம் பிரத்தியோகமாக வெளியிட்டது. முன்னதாக, ஹைதராபாத்தில் இயங்கும் பாரத் பயோடெக் இண்டர்நேஷனல் நிறுவனம், தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ சோதனையை 2 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களிடையே மேற்கொள்ள முன்மொழிந்திருந்தது.

இதுதொடர்பாக,  11.05.2021 அன்று துறை ரீதியான நிபுணர் குழு ஆலோசனை மேற்கொண்டது. விரிவான, ஆலசோனைக்குப் பிறகு மருத்துவ சோதனையை மேற்கொள்ள பரிந்துரை செய்தது.

இதனையடுத்து, 12.05.2021 அன்று  பாரத் பயோடெக் நிறுவனம்,  2 முதல் 18 வயது வரையிலான பிரிவினருக்கு கோவாக்சின் தடுப்பூசியின்  இரண்டாவது மற்றும் மூன்றாவது (II/III) கட்ட மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தது. இந்த மருத்துவ சோதனை 525 ஆரோக்கியமான தன்னார்வலர்களிடம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது/மூன்றாவது மருத்துவ சோதனையின் இடைக்கால தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.

Biotech's Covaxin vaccine: கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தும் பாரத் பயோடெக் - காரணம் என்ன?

26.08.2021 மற்றும் 11.10.2021 ஆகிய தேதிகளில் கோவாக்சின் தடுப்பூசியின் இடைக்காலத் தரவுகளை துறை ரீதியான பரிந்துரைக் குழு ஆய்வு செய்தது. விரிவான ஆய்வுக்குப்பின், கோவாக்சின்  தடுப்பூசியை  2 முதல் 18 வரையிலான பிரிவினருக்கு அவசர கால பயன்பாட்டுக்கு, சில ஒழுங்குமுறை நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம், கூடுதல் தரவுகளை கோரியிருந்தது. இந்நிலையில் தான், கடந்தாண்டு  டிசம்பர் 24 அன்று, மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அவசரப் பயன்பாட்டுக்கான பட்டியலில், 12-18 வயதுடையவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த, ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

Booster Dose: கொரோனாவுக்கு எதிரானப் போரில் பூஸ்டர் டோசின் பங்கு என்ன ?

அதன் தொடர்ச்சியாக, 15-18 வயதுடைய இளைஞர்களுக்கான தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, 27 டிசம்பர் 2021 அன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்  வெளியிட்டது.   2022 ஜனவரி 3ஆம் தேதி முதல் 15-18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

2022, மார்ச் 16 அன்று 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு தொங்கியது. இந்தப் பிரிவினருக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் இதனை தயாரிக்கிறது.

மேலும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு காடிலா ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்த ஜைகோவ்-டி தடுப்பூசி, அவசர கால பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த இந்திய மருந்து தலைமை கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by:Salanraj R
First published:

Tags: Corona Vaccine, CoronaVirus, Covaxin