• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவின் முதல் பெண் சத்தியாகிரகியான சுபத்ரா குமாரி சவுஹானை டூடுல் மூலம் கவுரவித்த கூகுள்!

இந்தியாவின் முதல் பெண் சத்தியாகிரகியான சுபத்ரா குமாரி சவுஹானை டூடுல் மூலம் கவுரவித்த கூகுள்!

சுபத்ரா குமாரி

சுபத்ரா குமாரி

நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டி வந்த சுபத்ரா குமாரி சவுஹான், மக்களை இந்திய தேசியவாத இயக்கத்தில் பங்கேற்க செய்யவும், நாட்டின் இறையாண்மைக்காக போராட மக்களை ஊக்குவிக்கவும் தனது கவிதை மூலம் தூண்டுகோலாக இருந்தார்.

  • Share this:
இலக்கியத்தில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற எழுத்தாளராகவும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வீர பெண்மணியான மறைந்த சுபத்ரா குமாரி சவுஹான் (Subhadra Kumari Chauhan) வாழ்க்கை மற்றும் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் கூகுள் ஒரு குறிப்பிடத்தக்க டூடுலை வெளியிட்டுள்ளது. இந்திய விடுதலை ஆர்வலரும், எழுத்தாளருமான சுபத்ரா குமாரி சவுஹானின் 117-வது பிறந்தநாள் ஆகஸ்ட் 16 திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது.

இதனிடையே சுபத்ரா குமாரி சவுஹானை கவுரவிக்கும் வகையிலான இந்த ஸ்பெஷல் டூடுலை நியூசிலாந்தைச் சேர்ந்த கலைஞர் பிரபா மல்லையா வடிவமைத்துள்ளார். இந்திய விடுதலை ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான சுபத்ரா குமாரியின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபா மல்லையா உருவாக்கி உள்ள இந்த டூடுலில், ஒரு பக்கத்தில் குதிரையில் வீரமங்கை அமர்ந்திருப்பதை போலவும், மறு பக்கம் சிலர் பதாகைகளை ஏந்தி ஊர்வலம் போவது போலவும் நடுவே மறைந்த சுபத்ரா குமாரி சவுஹான் காகிதத்தில் பேனாவை கொண்டு காகிதத்தில் எழுதுவது போலவும் டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனிடையே சுபத்ரா குமாரியின் எழுச்சியூட்டும் வரிகளில் உருவான "ஜான்சி கி ராணி" என்ற தலைப்பிலான தேசியவாத கவிதை இலக்கியமானது, இந்தி இலக்கியத்தில் அதிகம் படிக்கப்பட்ட ஒன்றாக பரவலாக கருதப்படுகிறது. மேலும் இவரது கவிதைகள் உறுதியான தேசியத்தால் தனித்துவமாக அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. கடந்த 1904-ம் வருடம்  சுபத்ரா குமாரி சவுகான் இந்திய கிராமமான நிஹல்பூரில் பிறந்தார். ராஜ்புத் குடும்பத்தில் பிறந்த இவர் தனது சிறு வயதிலிருந்தே எழுத தொடங்கினார். இவர் தன்னுடைய 9 வயதில் முதல் கவிதையை வெளியிட்டார்.

ALSO READ |  என்ன ஆச்சர்யம்! நாடு முழுவதும், பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒருமாதமாக எந்த மாற்றமும் இன்றி விற்பனை...

1919-ல் பிரயாக்ராஜில் உள்ள குரோஸ்ட்வைட் பெண்கள் பள்ளியில் (Crosthwaite Girls' School) படித்து தனது நடுநிலைப்பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்றார். பள்ளிக்கு செல்லும் வழியில் குதிரை வண்டியில் போகும் போது கூட இவர் எழுதும் பழக்கத்தை வைத்திருந்தார். நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டி வந்த சுபத்ரா குமாரி சவுஹான், மக்களை இந்திய தேசியவாத இயக்கத்தில் பங்கேற்க செய்யவும், நாட்டின் இறையாண்மைக்காக போராட மக்களை ஊக்குவிக்கவும் தனது கவிதை மூலம் தூண்டுகோலாக இருந்தார்.தாக்கூர் லக்ஷ்மன் சிங் சவுகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார், பின்னர் நாட்டின் முதல் பெண் சத்தியாகிரகி ஆனார். 1923 மற்றும் 1942-ம் ஆண்டுகளில்பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதற்காக அவர் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியப் பெண்கள் அனுபவித்த கஷ்டங்கள் மற்றும் சவால்களை பேசுவதில் சுபத்ரா குமாரியின் கூர்மையான உரைநடை மற்றும் வசனங்கள் முதன்மையாக கவனம் செலுத்தின.1940-களில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக இருந்த நிலையில் அவர் தொடர்ந்து புரட்சிகர அறிக்கைகளை வெளியிட்டார்.மொத்தம் 88 கவிதைகள் மற்றும் 46 சிறுகதைகளை வெளியிட்டதாக தகவல் கூறப்படுகிறது.இவரது எழுத்துக்கள் ஒரு முக்கிய மற்றும் வரலாற்று முன்னேற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. 1948-ம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று காலமானார். இவரை கவுரவிக்கும் வகையில் இந்திய கடலோர காவல்படை கப்பலுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. மேலும் மத்திய பிரதேச அரசு ஜபல்பூர் நகராட்சி அலுவலகம் முன்பு சுபத்ரா குமாரி சவுகானின் சிலையை வைத்து பெருமைப்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: