மணப்பெண் படிப்பைத் தொடர பீகார் கிராம பஞ்சாயத்து அளித்த அதிரடித்  தீர்ப்பு: குவியும் பாராட்டுக்கள்

கிராமப் பஞ்சாயத்து. மாதிரிப்படம்.

மணமகள் தன் படிப்பைத் தொடர்வதற்காக பிகார் கிராமப் பஞ்சாயத்து வித்தியாசமான தீர்ப்பை வழங்கி அனுமதியளித்துள்ளது.

 • Share this:
  பிஹார் மாநிலம், பாகல்பூர் மாவட்டம் கங்கானியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோர்காட் கிராமத்தைச் சேர்ந்த சுனில் குமாருக்கும் ஜஹாங்கிரா கிராமத்தைச் சேர்ந்த நேகா குமாரிக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.

  12ம் வகுப்புப் படித்த நேகாவுக்கு பெற்றோர் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். ஆனால் நேகாவுக்கோ படிப்பைத் தொடர ஆசை, கணவனும் புகுந்த வீட்டு பெரியோர்களும் இதனை ஏற்கவில்லை, இதனால் வீட்டை விட்டு வெளியேறி பாட்னாவுக்கு வந்து விட்டார் நேகா.

  இந்த விவரம் தெரியாத நேகாவின் தந்தை குருதேவ் தன் மகளை யாரோ கடத்தி விட்டனர் என்று அஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுவும் மணப்பெண் நேகாவுக்கு தெரியவர அவர் கங்கானியா பஞ்சாயத்து தலைவர் தாமோதர் சவுத்ரியை சந்தித்து முறையிட்டார்.

  இதனையடுத்து மணமகன், மணமகள் இருவீட்டாரையும் பஞ்சாயத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது பஞ்சாயத்தில் நேகா “நான்ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் இதை ஏற்க என் கணவர் மறுக்கிறார். எனவே கணவரை பிரிய அனுமதி வேண்டும்” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

  பஞ்சாயத்தார் பெண்ணின் கோரிக்கையை ஏற்று இருதரப்பிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர், ஆனால் இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை, இதனையடுத்து பஞ்சாயத்து தலைவர்களே முடிவெடுத்து நேகா படிப்பைத் தொடர கணவனைப் பிரியலாம் என்று தீர்ப்பு அளித்தனர்.

  மேலும் நேகாவை இது தொடர்பாக இருதரப்பினரும் தொந்தரவு செய்யக் கூடாது என்றும் பஞ்சாயத்தார் எழுதி வாங்கிக் கொண்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கிராமப் பஞ்சாயத்தினர் பெண்ணின் படிப்புக்கு சாதகமாக வழங்கிய தீர்ப்பு பலதரப்புகளிலும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
  Published by:Muthukumar
  First published: