முகப்பு /செய்தி /இந்தியா / ஊழியர்களின் மனநலப் பிரச்சனைகளால் இந்திய நிறுவனங்களுக்கு ரூ.1400 கோடி செலவு! ஆய்வு சொல்லும் ஷாக் தகவல்!

ஊழியர்களின் மனநலப் பிரச்சனைகளால் இந்திய நிறுவனங்களுக்கு ரூ.1400 கோடி செலவு! ஆய்வு சொல்லும் ஷாக் தகவல்!

கடந்த ஆண்டு, 80 சதவீத இந்திய பணியாளர்கள் மனநலப் பிரச்சனைகளைப் புகாரளித்ததாக கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

கடந்த ஆண்டு, 80 சதவீத இந்திய பணியாளர்கள் மனநலப் பிரச்சனைகளைப் புகாரளித்ததாக கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

கடந்த ஆண்டு, 80 சதவீத இந்திய பணியாளர்கள் மனநலப் பிரச்சனைகளைப் புகாரளித்ததாக கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

ஊழியர்களிடையே ஏற்படும் மோசமான மனநலம் இந்திய நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1,400 கோடி செலவு ஏற்பட்டுள்ளதாக டெலாய்ட் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர மனநோயால் அதிக விடுப்பு மற்றும் பிற காரணங்களால், கிட்டத்தட்ட 4,000 ஊழியர்களை ஆய்வு செய்த பின்னர் டெலாய்ட் இந்த அறிக்கையில் மதிப்பிட்டுள்ளது.

மனநலப் பிரச்சனைகள் இந்தியாவில் நீண்ட காலமாக நிலவிவரும் பிரச்சனைகளுள் ஒன்று. ஆனால், இளைய தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் விழிப்புணர்வு மற்றும் கொரோனா தொற்றுநோயின் தாக்கம் ஆகியவை மக்களை அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வை புரட்டியது போல் ஆகிவிட்டது. கணக்கெடுக்கப்பட்டவர்களில் சுமார் 47 சதவீதம் பேர் பணியிடங்கள் தொடர்பான மன அழுத்தத்தை தங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் மிகப்பெரிய காரணியாகக் கருதியதாக ஆய்வு கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து நிதி மற்றும் கொரோனா நோய்தொற்று சவால்களும் அடங்கும். இந்த கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை நடத்தப்பட்டு நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது.

‘மனநலம் தொடர்பான சவால்கள் இந்திய பணியாளர்களுக்கு புதிதல்ல. பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை பெரியது மட்டுமல்ல, சவாலின் அளவும் அதிகமாக உள்ளது. நீண்ட பணி அட்டவணைகள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் சக ஒப்பீடு (குறிப்பாக சமூக ஊடக தளங்களில்) ஆகியவற்றில் தொகுக்கப்பட்ட செயல்திறன் சார்ந்த கலாச்சாரங்களால் இது எதிரொலிக்கிறது’ என்கிறார் சாரு சேகல், பங்குதாரர் மற்றும் வாழ்க்கை அறிவியல் மற்றும் ஹெல்த் கேர் தலைவர்.

கடந்த ஆண்டு, 80 சதவீத இந்திய பணியாளர்கள் மனநலப் பிரச்சனைகளைப் புகாரளித்ததாக கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. கடந்த ஆண்டு நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் இரண்டாவது அலைக்குப் பின்னர் சமூகத்தில் ஏற்பட்ட களங்கம், பாதிக்கப்பட்ட மக்களில் சுமார் 39 சதவீதம் பேர் எந்தவொரு தணிக்கும் நடவடிக்கைகளையும் எடுப்பதைத் தடுத்தது. கூடுதலாக, பதிலளித்தவர்களில் 33 சதவீதம் பேர் மோசமான மனநலம் இருந்தபோதிலும் தொடர்ந்து வேலை செய்தனர், அதே நேரத்தில் 29 சதவீதம் பேர் ஓய்வு எடுத்தும் 20 சதவீதம் பேர் ராஜினாமா செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) மதிப்பீட்டின்படி, மோசமான மனநலம் உலகப் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் கோடி உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் மட்டும், 2012 மற்றும் 2030க்கு இடையில் மனநல நிலைமைகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு சுமார் ரூ.1.03 லட்சம் கோடி ஆகும் என்று 2019ல் உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: India, Mental Health, Mental Stress