• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • NEET Result: 4 மணிநேரம் மட்டுமே படிப்பு... நீட் தேர்வில் சாதித்தது எப்படி?

NEET Result: 4 மணிநேரம் மட்டுமே படிப்பு... நீட் தேர்வில் சாதித்தது எப்படி?

மிருணாள் குட்டேரி

மிருணாள் குட்டேரி

நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ள மிருணாள் குட்டேரி (Mrinal Kutteri ) கூறுகையில், ஒரு நாளைக்கு குறைந்தது 12 மணிநேரம் படிப்பதாகக் கூறுவோரின் நேர்காணல்கள் அச்சமூட்டின. நான் தினமும் 4 மணி நேரம் படிப்பதற்காகச் செலவழித்தேன் என்று தெரிவித்தார்.

  • Share this:
    மருத்துவ இளங்கலை படிப்பிற்கான  நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் மிருணாள் குட்டேரி 720க்கு 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தனது வெற்றி ரகசியம் குறித்து குறிப்பிடும்போது ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே படித்ததாக அவர் குறிப்பிட்டார்.

    மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு  நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், ஐதராபாத்தைச் சேர்ந்த மிருணாள் குட்டேரி 720க்கு 720 மதிப்பெண்பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    பொதுவாக இதுபோன்ற தேர்வுகளுக்கு தினமும் பல மணி நேரத்தை படிப்பதற்காக மாணவர்கள் செலவிடுவார்கள் ஆனால், தினமும் 4 மணி நேரம் மட்டுமே நீட் தேர்வுக்காக செலவிட்டதாக மிருணாள் குட்டேரி கூறியுள்ளார். நீட் தேர்வு வெற்றி தொடர்பாக நியூஸ் 18 ஊடகத்துக்கு  பேட்டியளித்த அவர், தேர்வுக்கு படிக்கும்போது 45 நிமிடங்களுக்கு ஒருமுறை ஓய்வு எடுத்துகொண்டதாகவும் நெட்பிளிக்ஸ், அமேசான்போன்ற ஓடிடி தளங்களை பார்க்க அதிக நேரம் செலவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

    "ஒரு நாளைக்கு குறைந்தது 12 மணிநேரம் படிப்பதாகக் கூறும் முதலிடம் பெற்றவர்களின் நேர்காணல்கள் அச்சமூட்டின. தொற்றுநோய் காலத்தில் நான் வீட்டில் இருந்தபோது, தொலைபேசி, டிவி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றைஅதிகம் பயன்படுத்தினேன். இவை அனைத்தும் கவனச்சிதறல்களாக இருந்தன, ஆரம்பத்தில், நான் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. காலப்போக்கில் எல்லாம் சிறப்பாக அமைந்தது.  நான் தினமும் 4 மணி நேரம் படிப்பதற்காகச் செலவழித்தேன்” என்று அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: COP26 climate summit:2070க்குள் இலக்கை எட்டுவோம்: ஐ.நா. மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி!


    தேர்வுக்கு தயாராகும்போது மட்டுமல்லாது தேர்வு எழுதும்போது அவர் தனிப்பட்ட முறையை பின்பற்றினார். பொதுவாக நீட் தேர்வின்போது அதிக மதிப்பெண் எடுக்க முயற்சிக்கும் மாணவர்கள் உயிரியலை கேள்விகளுக்கு முதலில் விடை அளிப்பார்கள். ஆனால், மிருணாள் குட்டேரியோ, உயிரியல் கேள்விகளுக்கு கடைசியாக விடையளித்தாக கூறுகிறார்.

    மேலும், முதலிடம் பெற்றவர்கள் நேர்காணல்களைப் படிக்கும்போது, ​​அவர்கள் என்ன அட்டவணையைப் பின்பற்றுகிறார்கள், அவர்களின் படிப்பு முறைகள் என்ன என்பதை  கண்டுபிடிப்பேன். எனது தயாரிப்பின் போது, நானும் நிறைய நடைமுறைகளைப் பின்பற்றினேன், ஆனால் ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை எனக்கு வேலை செய்யாது என்பதை உணர்ந்தேன். என்னை ஒருபோதும் கட்டாயப்படுத்தாத மற்றும் எனது சொந்த பாணியில் படிப்பதை  தடுக்காத  பெற்றோரையும் ஆசிரியர்களையும் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி” என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும் படிக்க: தவளையின் ரத்த செல்கள் அணுக்கரு உள்ளதா? ரிசோர்ஜிமெண்ட்டோன்னா என்ன தெரியுமா?- ஹரியானா போலீஸ் நுழைவுத் தேர்வில் முடியைப் பிய்த்துக் கொள்ளும் கேள்விகள்


    போட்டித் தேர்வுக்குத் தயாராகும் எவரும் தைரியமாகவும், சோதனை முயற்சிகள் ஈடுபடவும் தயாராக இருக்க வேண்டும் அவர்களுக்கு எது வேலை செய்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும், யார் என்ன சொன்னாலும்  தனக்கு வேலை செய்யும் முயற்சியில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறும் மிருணாள், கொரொனா நேரத்தில் மருத்துவர்கள் அயராது பணியாற்றினார்கள் என்றும் அவர்களது உழைப்பு மருத்துவராக வேண்டும் என்று தனக்கு ஊக்கம் அளித்ததாகவும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: