Home /News /national /

உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்திய கல்லூரிகளில் அனுமதிக்க முடியாது - மத்திய அரசு

உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்திய கல்லூரிகளில் அனுமதிக்க முடியாது - மத்திய அரசு

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

நீட் தேர்வில்  போதிய  மதிப்பெண்கள் பெறாத, உயர்கல்விக்கான அணுகல் உள்ள மாணவர்கள் மட்டுமே மேலைநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்கின்றனர் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |
    இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்களை சேர்க்க முடியாது  என்று  உச்சநீதிமன்றத்தில்  மத்திய அரசு திட்டவட்டமாக  தெரிவித்துள்ளது.

    ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக, உக்ரைன் நாட்டில் இருந்து ஆயிரகணக்கான இந்திய மாணவர்கள் இந்தியா திரும்பினர். தற்போது வரை இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் உக்ரைன் நாட்டுக்கு திரும்ப வழியில்லாத காரணத்தினால், இந்தியாவில் தங்கள் மருத்துவப் படிப்புகளில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கில் இன்று பதிலளித்த மத்திய அரசு, " உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை இந்திய மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க முடியாது. தேசிய மருத்துவ ஆணையச் சட்டப்படி இதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.

    மேலும், நீட் தேர்வில்  போதிய  மதிப்பெண்கள் பெறாத, உயர்கல்விக்கான அணுகல் உள்ள மாணவர்கள் மட்டுமே மேலைநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்கின்றனர். குறைவான தகுதி கொண்ட மாணவர்களை நாட்டின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க அனுமதிப்பது பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பல்வேறு தரப்பினரும் இதுபோன்ற வாய்ப்பைக் கேட்டு நீதிமன்றத்தை அணுகலாம்.  மேலும், விதிமுறையில் தளர்வு கொண்டு வருவது நாட்டின் மருத்துவக் கல்வியின் தரத்தை பாதிக்கும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. 

    இதையும் வாசிக்க: மாணவர்கள் குறைவாக இருந்தால் பாடப்பிரிவுகளை ரத்து செய்க - பள்ளி கல்வித்துறை

    முன்னதாக, 2022 ஜூன் மாதம் 30 அல்லது அதற்கு முன்பாக மருத்துவப் படிப்பிற்கான சான்றிதழ் பெற்று  ரஷ்யா படையெடுப்பால் இந்தியாவுக்கு திரும்பிய மாணவர்கள் FMGE  எனப்படும் அயல்நாடு தணிக்கைத் தேர்வில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்தது. மேலும், ஒரு முறை வாய்ப்பாக, இந்தியாவில் மருத்துவம் பார்ப்பதற்கு Compulsory Rotating Medical Internship என்ற இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Medical Admission, Neet, Russia - Ukraine

    அடுத்த செய்தி