புதுச்சேரி: மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை.. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட மாணவர்கள்

புதுச்சேரி: மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை.. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட மாணவர்கள்

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% முன்னுரிமை வழங்குமாறு கோரி புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

 • Share this:
  புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத முன்னுரிமை வழங்குவதற்கான கோப்பிற்கு ஒப்புதல் அளிக்காத துணை நிலை ஆளுநரைக் கண்டித்து மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

  2016-2017ம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை, ஜூலை 14ம் தேதி கூடிய அமைச்சரவையில் அரசுப்பள்ளி மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கும் 7.5 % விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டு, அதற்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டது.

  Also read: மின்வாரியத்தைத் தனியார் மயமாக்குவதை உடனே கைவிடுக - மு.க. ஸ்டாலின்

  இதேபோல் புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் முன்னுரிமை வழங்க சட்டப்பேரவையில் முடிவு எடுக்கப்பட்டு அதற்கான கோப்புகளை துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசுக்கு கிரண்பேடி அனுப்பி வைத்துள்ளார். அவர் ஒப்புதல் தராமல் இவ்வாறு அனுப்பியதற்கு எதிராகவே மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: