Home /News /national /

கேரளாவில் 'ஹிஜாப் 'அணிந்து ஓணம் கொண்டாடிய மாணவிகள்... காங்கிரஸ் எம்பி ஆதரவு

கேரளாவில் 'ஹிஜாப் 'அணிந்து ஓணம் கொண்டாடிய மாணவிகள்... காங்கிரஸ் எம்பி ஆதரவு

onam festival

onam festival

கேரளாவில் 'ஹிஜாப் 'அணிந்து ஓணம் கொண்டாட்டம். சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய வீடியோவுக்கு காங்கிரஸ்- எம்பி சசிதரூர் உட்பட்டோர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
    கேரளாவில் மலப்புரத்தில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து ஓணம் பண்டிகை கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகின்றன. 

    மலப்புரம்- மாவட்டத்திலுள்ள வண்டூர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் ஓணம் பண்டிகையை நேற்று கொண்டாடியுள்ளனர். அப்போது மாணவிகள் சேலை அணிந்து வந்து ஆடிப்பாடி நடனமாடினர்.

    அப்போது பல முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் எனப்படும் முகத்தை மறைக்கும் துணியை அணிந்தபடி, தங்கள் தோழிகளுடன் சேர்ந்து நடனம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.



    கேரளாவின் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது தடை விதிக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து பலரும் தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

    Also see... கேரளாவில் தெரு நாய் கடித்து 12 வயது சிறுமி உயிரிழப்பு

    கேரளாவை சேர்ந்த  காங்கிரஸ் எம்பி சசிதரூர் , உட்பட பல அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hijab, Kerala, Onam, School students

    அடுத்த செய்தி