மத்தியப் பிரேதச மாநிலம் இந்தூரில் உள்ள பிஎம் என்ற பார்மசி கல்லூரியில் முதல்வராக இருப்பவர் விமுக்தா சர்மா. 54 வயதான இவர் நேற்று முன்தினம் மாலை நான்கு மணி அளவில் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவரான 24 வயதான அசுதோஷ் ஸ்ரீவத்சவா காரை மறித்துள்ளார். பின்னர், முதல்வர் விமுத்தாவிடம் வாக்குவாதம் செய்த அவர், திடீரென தன்னிடம் இருந்த பெட்ரோலை முதல்வர் மீது உற்றி சிகரெட் லைட்டர் மூலமாக தீவைத்துள்ளார்.
இதில் முதல்வரின் உடலில் தீ மளமளவென பரவிய நிலையில், அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த கல்லூரி ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டனர். சுமார் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் விமுக்தா, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்திற்கு பின்னர் தப்பியோடி தற்கொலை செய்ய முயற்சித்த முன்னாள் மாணவர் ஸ்ரீவத்சாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர் கடந்தாண்டு ஜூலை மாதம் படிப்பை முடித்த நிலையில், மார்க் ஷீட் வழங்குவது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவருக்கும் பல மாதங்களாக பிரச்னை இருந்துள்ளது. இவர் ஏழாவது செமஸ்டரில் அரியர் வைத்து கடைசி செமஸ்டரில் அதை எழுதி கிளியர் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிவராத்திரி அன்று மனைவியை கொன்று சடலத்துடன் நிர்வாண பூஜை செய்த நபர்.. பகீர் சம்பவம்
இந்த பின்னணியில் இவருக்கு மார்க் ஷீட் வழங்குவதில் கல்லூரி நிர்வாகம் இழுத்தடித்ததால் மாணவருக்கு ஆத்திரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இவர் கல்லூரி பேராசிரியர் ஒருவரை கத்தியால் தாக்கியதற்காக சிறைக்கு சென்றுள்ளார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Madhya pradesh