• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆந்திராவில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் போலீசார் தடியடி!

ஆந்திராவில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் போலீசார் தடியடி!

ஆந்திராவில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் போலீசார் தடியடி!

ஆந்திராவில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் போலீசார் தடியடி!

ஆந்திராவில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பள்ளிகள் கல்லூரிகள் ஆகியவற்றுடன் இணைப்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

  • Share this:
    ஆந்திர அரசு பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிற்கு வழங்கப்படும் நிதி உதவியை நிறுத்த இருப்பதாகவும், அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள் அந்தந்த நிர்வாகங்கள் சுயமாக நடத்தி கொள்ள வேண்டும் என அரசாணை பிறப்பித்தது.

    ஆந்திர மாநிலம் அனந்தபூரில் அரசு நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் SSBN கல்லூரி தனியார் கல்லூரி ஒன்று உடன் இணைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணம் பல மடங்கு உயரக் கூடும் என்ற அச்சம் மாணவர்களுடைய பரவலாக ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர் சங்கத்தினர் அரசு முடிவை கண்டித்து SSBN கல்லூரி எதிரில் உள்ள சாலையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பதற்காக போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். தடியடி சம்பவத்தில் மாணவர் ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத் தலைவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் எறிந்த கல் ஜெயலட்சுமி என்ற மாணவி தலையில் விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    அனந்தபூரில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொது செயலாளர் நாராலோகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: