ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஃப்ரீயா சாப்டுறியா.. பாத்திரம் கழுவு.. திருமண விருந்து சாப்பிட்ட மாணவனை திட்டி வீடியோ எடுத்த மக்கள்

ஃப்ரீயா சாப்டுறியா.. பாத்திரம் கழுவு.. திருமண விருந்து சாப்பிட்ட மாணவனை திட்டி வீடியோ எடுத்த மக்கள்

காட்சி படம்

காட்சி படம்

உன் பெற்றோர் உனக்கு பணம் அனுப்புவதில்லையா என்றும், பிறந்த ஊருக்கு அவப்பெயரை ஏன் ஏற்படுத்துகிறாய் என்றும் ஒருவர் அவரை வசைபாடியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madhya Pradesh, India

மத்திய பிரதேசத்தில் அழையா விருந்தாளியாக திருமணத்திற்கு சென்ற எம்.பி.ஏ மாணவரை பாத்திரம் விளக்க வைத்து தண்டித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ பயின்று வரும் மாணவர் ஒருவர், அதேபகுதியில் நடந்த திருமணத்திற்கு சென்று உணவருந்தியுள்ளார். இதுவரை பார்த்திராத அந்த மாணவரை தாங்கள் திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று கண்டுபிடித்த திருமண வீட்டார்கள், மற்றும் உறவினர்கள் அந்த மாணவரை பிடித்து மண்டப நுழைவுவாயில் முன்பு பாத்திரம் கழுவ வைத்து வீடியோ எடுத்துள்ளனர்.

இதையும் படிக்க :  பள்ளி வகுப்பறையில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் மாணவர்கள் கைது

அந்த வீடியோவில் ஒருவர், “நீ இலவசமாக உணவு உண்டால் உனக்கு கிடைக்கும் தண்டனை என்ன தெரியுமா..? நீ உன் வீட்டில் பாத்திரம் கழுவுவதை போல இங்கே கழுவு..” என்று அவரை திட்டி பாத்திரங்களை கழுவ சொல்லும் பகுதியும் இடம்பெற்றுள்ளது.

மேலும், உன் பெற்றோர் உனக்கு பணம் அனுப்புவதில்லையா என்றும், பிறந்த ஊருக்கு அவப்பெயரை ஏன் ஏற்படுத்துகிறாய் என்றும் ஒருவர் அவரை வசைபாடியுள்ளார்.

First published:

Tags: Humanitarian, Madhya pradesh, Marriage, Trending News, Trending Video