முகப்பு /செய்தி /இந்தியா / கூடுதலாகக் கிலோவிற்கு ரூ.2,000 கேட்ட விமான நிறுவனம்... 5 கிலோ உடைமைகளை அங்கேயே விட்டு வெளிநாடு சென்ற மாணவர்...

கூடுதலாகக் கிலோவிற்கு ரூ.2,000 கேட்ட விமான நிறுவனம்... 5 கிலோ உடைமைகளை அங்கேயே விட்டு வெளிநாடு சென்ற மாணவர்...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஏர் ஏசியா நிறுவனம் கூடுதல் லக்கேஜ்ஜுக்கு கிலோவுக்கு ரூ.2000 கட்டணம் விதித்தாக மாணவர் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Bangalore, India

பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் ஏர் ஏசியா நிறுவனம் கூடுதலாக உள்ள உடைமைகளின் கிலோவிற்கு ரூ.2000 அதிகமாகக் கேட்டதாகக்கூறி மாணவர் புகார் அளித்துள்ளார்.

இதனால் 5 கிலோ அளவிலான உடைமைகளை விமான நிலையத்திலேயே விட்டு செல்ல வேண்டிய நிலையில் தள்ளப்பட்டதாகப் புகாரில் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த கார்த்திக் சுராஜ் படேல் என்ற 23 வயதான மாணவர், பெங்களூரில் இருந்து மலேசியாவிற்குப் பயணம் செய்ய மார்ச் 5 ஆம் தேதி பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் 20 கிலோ எடைகொண்ட உடைமைகளை எடுத்துச்சென்றுள்ளார். அதற்கு ஏர் ஏசியா நிறுவனம் கிலோவிற்கு ரூ.2000 கூடுதலாகக் கட்டணமாகக் கேட்டுள்ளனது.

நிறுவனத்தில் இணையத்தளத்தில் கூடுதல் கட்டணமாக ரூ.500 மட்டும் குறிப்பிடப்பட்டதுள்ளது என்று மாணவர் நிர்வாகத்திடம் கேட்டதற்கு இணையத்தளத்தில் இன்னும் முறையாக அப்டேட் செய்யவில்லை என்று கூறினர் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

Also Read : போபால் விஷவாயு கசிவு விபத்து இழப்பீடு வழக்கு... மத்திய அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி!

நிர்வாகத்தின் இந்த செயலால் வேறுவழியின்றி 5 கிலோ உடைமைகளை விமான நிலையத்திலேயே விட்டு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மாணவர் கூறியுள்ளார். நிர்வாகத்தின் தரப்பில் இருந்து, மாணவர் உள்ளூர் விமான விதிகளில் படி கேள்வி எழுப்பியதாகவும் , ரூ.2000 கூடுதல் கட்டணம் சர்வதேச விமான விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Air Asia, Bangalore