ஹோம் /நியூஸ் /இந்தியா /

புதுச்சேரியில் தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடிய மாணவன் உயிரிழப்பு: விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

புதுச்சேரியில் தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடிய மாணவன் உயிரிழப்பு: விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

புதுச்சேரி- உயிரிழந்த மாணவர்

புதுச்சேரி- உயிரிழந்த மாணவர்

புதுச்சேரியில் ஃபயர்வால் விளையாட்டால் உயிரிழந்த மாணவனின் மரணம் குறி்த்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. விளையாடிக் கொண்டே இருந்தபோது மூளையில் திடீரென ஏற்பட்ட ரத்தக் கசிவால் மாணவன் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  புதுச்சேரியல் 16 வயதே ஆன மாணவன் தர்ஷன், ஃபயர்வால் என்ற ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து மரணமடைந்தார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவே மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

  புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதான தர்ஷன். தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். நன்கு படிக்கக் கூடிய தர்ஷன், ஃபயர்வால் என்ற ஆன்லைன் விளையாட்டில் அதிகமாக ஈடுபட ஆரம்பித்தார். திங்கட்கிழமை மாலை, வீட்டின் அறையில் அமர்ந்தபடி காதுகளில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு, 4 மணிநேரம் தொடர்ந்து ஃபயர்வால் விளையாடியுள்ளார்.

  திடீரென அவர் மயங்கி விழுந்தார். பின்னர், தனியார் மருத்துவமனை கொண்டு சென்ற வழியில் உயிரிழந்தார். இதுவரை ஆன்லைன் விளையாட்டுகளில் மாணவர்கள், இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள்தான் நடந்துள்ளன.

  இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டு விளையாடியதால் மயங்கி விழுந்து மாணவன் மரணமடைந்த சம்பவம் தமிழகம், புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடற்கூறாய்வின் முதற்கட்ட அறிக்கையில், மாணவனின் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவுதான் உயிரிழப்பிற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

  மேலும் படிக்க... தொடரும் கலைக்கலைப்பு கொடூரம்... விசாரணைக்கு உத்தரவு

  ஆன்லைன் வகுப்புகளால் உடல்நிலையில் ஏற்படும் மாற்றம் குறித்து இன்னும் தீர்மானமான முடிவுகள் வராத நிலையில், நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகளை பெற்றோர் கண்காணிப்பதும், ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து விலகி இருப்பதுமே இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்கும் வழிகள் என்கின்றனர் மருத்துவர்கள்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Addicted to Online Game, Crime | குற்றச் செய்திகள், Puducherry