சொந்தமாக வகுப்பறை உருவாக்கி பழங்குடி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் மாணவி
தமிழகம் - கேரள எல்லையில் உள்ள சோலையூர் கிராமத்தில், ஆன்லைன் வகுப்புகளுக்கு வாய்ப்பில்லாத நிலையில் 14 வயது பழங்குடி சிறுமி கிராமத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்கு தனியாக வகுப்பறையை உருவாக்கி பாடம் நடத்தி வருகின்றார்.

- News18 Tamil
- Last Updated: September 29, 2020, 11:08 PM IST
கேரள மாநிலம் அட்டப்பாடி மலைப்பகுதியில் உள்ளது சோலையூர் பழங்குடி கிராமம். தமிழக கேரள எல்லைப்பகுதியில் உள்ள இக்கிராமத்தில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. மின்சாரம், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலை அங்கு உள்ளது. மேலும் இந்த கிராமத்தில் பழங்குடி குழந்தைகளுக்கு செல்போன், டி.வி போன்றவை இல்லாதததால் ஆன்லைன் வகுப்புகளில் இங்குள்ள பழங்குடி மாணவர்களால் பங்கேற்க இயலாத நிலை இருந்து வருகின்றது.
இந்நிலையில், சோலையூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுதிர் என்பவரின் மூத்த மகள் அனாமிகா (14), திருவனந்தபுரத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் செயல்படாததால் மாணவி அனாமிகா சொந்த ஊரில் தங்கியுள்ளார். இங்கு மின்சாரம் மற்றும் ஸ்மார்ட்போன் இல்லாததால் அனாமிகா ஆன்லைனில் பாடம் கற்க முடியாமல் சிரமம் அடைந்தார்.
Also read: விரைவில் வெளியாகிறது மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு 5.0 - திரையரங்குகள், பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுமா? இதே நிலை நீடித்தால் பழங்குடி குழந்தைகளின் கல்வி இழக்க நேரிடும் என்று பயந்த மாணவி அனாமிகா, தனது தந்தையின் உதவியோடு தங்களது சொந்த இடத்தில் கூரைகளால் ஒரு வகுப்பறையை உருவாக்கி, ஆன்லைனில் பாடம் கற்க முடியாத பழங்குடி மாணவர்களை வீடுவீடாக தேடிச்சென்று அழைத்து வந்து பாடம் நடத்தி வருகின்றார். தற்போது அந்த கிராமத்தில் உள்ள 10 மாணவ, மாணவிககுக்கு பாடம் நடத்தி வருகின்றார்.
மாணவி அனாமிகாவுக்கு அவர் படிக்கும் பள்ளியில் தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய 4 மொழிகள் கற்று கொடுக்கப்படுகின்றன. அவற்றை இங்குள்ள மாணவ, மாணவிகளுக்கும் மாணவி அனாமிகா கற்றுக்கொடுத்து வருவதுடன் அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறார். பழங்குடி மாணவி அனாமிகாவின் இந்த முயற்சி கிராம மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், சோலையூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுதிர் என்பவரின் மூத்த மகள் அனாமிகா (14), திருவனந்தபுரத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் செயல்படாததால் மாணவி அனாமிகா சொந்த ஊரில் தங்கியுள்ளார். இங்கு மின்சாரம் மற்றும் ஸ்மார்ட்போன் இல்லாததால் அனாமிகா ஆன்லைனில் பாடம் கற்க முடியாமல் சிரமம் அடைந்தார்.
Also read: விரைவில் வெளியாகிறது மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு 5.0 - திரையரங்குகள், பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுமா?