Home /News /national /

கேரளாவில் அதிகரிக்கும் தெருநாய் தாக்குதல்... சிறுவர்களை கடித்து இழுத்து செல்லும் சிசிடிவி விடியோவால் பரபரப்பு...

கேரளாவில் அதிகரிக்கும் தெருநாய் தாக்குதல்... சிறுவர்களை கடித்து இழுத்து செல்லும் சிசிடிவி விடியோவால் பரபரப்பு...

தெருநாய் கடித்த சிசிடிவி விடியோ

தெருநாய் கடித்த சிசிடிவி விடியோ

kerala | கேரளாவில் தெருநாய் யாரையாவது கடித்தால் சோறு போடுபவர்களுக்கு அபராதம். தடுப்பூசி செலவையும் ஏற்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் அதிரடி பரபரப்பு உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India
கேரளாவில் சில தினங்களுக்கு முன்பு  தெருநாய் கடித்து சிறுமி உயிரிழந்த நிலையில் தெருநாய்களின் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் நிலையில்  கோழிக்கோடு பகுதியில் சிறுவர்கள் தெருநாய் தாக்குதலுக்கு உள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து விட்டதாகவும், அதை கட்டுப்படுத்த உத்தரவிடக் கோரியும் வழக்கறிஞர் வி.கே.பிஜூ உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், ‘கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரளாவில் நாய்கடியால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உச்சகட்டமாக சமீபத்தில் 12 வயது சிறுமி நாய்கடியால் இறந்தார்.

கடந்த 2015ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கில், உள்ளாட்சி சட்டங்கள்படி தெருநாய்கள் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தெரு நாய்களால் ஆபத்து தொடர்ந்து கொண்டிருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: பொதுவாக தெரு நாய்களுக்கு உணவு தருபவர்களால் அவற்றை எளிதாக அடையாளம் காண முடியும். எனவே, அந்த தெரு நாய்கள் யாரையாவது கடித்தால், அதற்கு உணவு தருபவர்களே பொறுப்பாவார்கள். அவர்கள்தான் தெருநாய்க்கு தடுப்பூசி செலுத்தும் செலவையும் ஏற்க வேண்டும். அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்.

நாய்களுக்கு உணவு கிடைக்காவிட்டாலோ அல்லது ஏதாவது தொற்று பாதிப்பு ஏற்பட்டாலோ அவை கொடூரமாக மாறி விடுகின்றன. எனவே, தெருநாய்கள் குறித்த கவலைகளுக்கு தீர்வு காண்பது அவசியம். தெருநாய்களுக்கு உணவு வைப்பவர்கள்தான், பொதுமக்களை அந்த நாய்கள் கடிக்காமல் தடுக்க வேண்டும். அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

ரேபிஸ் வைரஸ் போன்ற தொற்றால் பாதிக்கப்பட்ட தெருநாய்களைக் கண்டறிந்து கால்நடை பராமரிப்புதுறை தனியாக பாதுகாக்க வேண்டும். இந்த வழக்கில் விலங்குகள் நல வாரியத்தினர், அவர்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தபின் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also see...மானாமதுரை: இறந்துபோன கோவில் காளையை கொண்டாடிய கிராம மக்கள்

இந்நிலையில் தற்போது கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் அரக்கிணரு பகுதியில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை தெருநாய் கொடூரமாக கடித்து தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சில சிறுவர்கள் வீட்டு காம்பவுண்ட்  உள்ளே தப்பி ஓடுவதும் சைக்கிளில் இருந்த ஒருவரை நாய் கடித்து இழுத்து செல்லும் பதைப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Published by:Vaijayanthi S
First published:

Tags: Dog, Dog stuck, Kerala, Supreme court

அடுத்த செய்தி