ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் சிக்கிய தலை.. ஒருவாரம் அவதிப்பட்ட நாய் - பத்திரமாக மீட்பு

பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் சிக்கிய தலை.. ஒருவாரம் அவதிப்பட்ட நாய் - பத்திரமாக மீட்பு

பிளாஸ்டிக் பாட்டிலில் தலை சிக்கிய தெரு நாய்

பிளாஸ்டிக் பாட்டிலில் தலை சிக்கிய தெரு நாய்

Puducherry | பிளாஸ்டிக் பாட்டிலில் தலையை கொடுத்து ஒருவாரமாக அவதிப்பட்டு வந்த நாயை பத்திரமாக மீட்டனர் பிராணிகள் நல மற்றும் பாதுகாப்பு இயக்கத்தினர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புதுச்சேரியில்  பிளாஸ்டிக் பாட்டிலில் தலையை கொடுத்து ஒருவாரமாக மாட்டிக்கொண்டு அவதிப்பட்ட நாயை பத்திரமாக மீட்டுள்ளனர். 

புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட ஆலங்குப்பம் சஞ்சீவி நகரில் தெரு நாய் பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள   உணவு உண்ணும்போது தலை மாட்டிக்கொண்டது.கடந்த ஒரு வார காலமாக  அதை வெளியே எடுக்க முடியாமல் சத்தம் போட்டு நாய் போராடி  கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதை வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களை பார்த்ததும் அந்த நாய் தெறித்து ஓடி விட்டது.

இதுபற்றி புதுச்சேரி பிராணிகள் நல மற்றும் பாதுகாப்பு இயக்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த இயக்கத்தின் தலைவர் கால்நடை மருத்துவர் செல்வமுத்து  அப்பகுதிக்கு மீட்புக் குழுவினருடன் விரைந்து சென்று பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டனர்.

சிறிய வலையை வீசி  நாய்க்கு  மயக்க ஊசி செலுத்தி மயங்கியவுடன் தலையில் மாட்டிக் கொண்ட பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள தலையை  பத்திரமாக மீட்டனர். அதற்கு பிறகு நாய்க்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர்.

மீட்புப் பணியில் அப்பகுதி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உதவி புரிந்தனர்.  பிராணிகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சார்ந்த ராகுல்,தர்மா, சதீஷ் ஆகியோர் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இது போல் புதுச்சேரியில் கால்நடைகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக பிராணிகள் நல மற்றும் பாதுகாப்பு இயக்கத்திற்கு  95003 65984 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க இயக்கத்தின் தலைவர் கால்நடை மருத்துவர் செல்வமுத்து கேட்டு கொண்டுள்ளார்.

Published by:Elakiya J
First published:

Tags: Puducherry