150 ரூபாய் தினசரி வருமானத்தை கொண்டு ஏழை குழந்தைகள் கல்வி கற்பதற்காக சிறுக சிறுக சேர்த்து பள்ளிக்கூடம் ஒன்றை கட்டிய முதியவருக்கு நாட்டின் மிக உயரியதான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர்...
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவகளுக்கு இன்று பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்த விருது வழங்கும் விழாவில் கர்நாடக மாநிலம் மங்களூர் அருகேயுள்ள பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த 68 வயதாகும் ஹரேகல ஹஜ்ஜப்பாவுக்கு சிறந்த சமூக பணிக்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
கல்வி அறிவே இல்லாத மிகவும் அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்தவரான ஹஜ்ஜப்பா ஒரு பழ வியாபாரி. கூடையில் வைத்து தலைசுமையாக தூக்கிச் சென்று ஆரஞ்சு பழங்களை விற்பனை செய்வதன் மூலம் தினசரி வருமானமாக 150 ரூபாய் பெற்று வந்த இவர், தனது கிராம மக்கள் தன்னைப் போல கல்வியறிவு இல்லாதவனாக இருக்கக் கூடாது என கருதி எதிர்காலத்தில் அவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தன்னுடைய சொற்ப வருமானத்தில் சிரமப்பட்டு பள்ளிக் கூடம் ஒன்றை கட்டி தற்போது அதில் பல மாணவர்கள் கல்வி பயில காரணமாக இருந்துள்ளார்.

Harekala Hajabba
Also read:
தங்கள் கிராமத்தில் மதுக்கடை அமைக்க வேண்டும் என பெண்கள் போராட்டம் – விசித்திரமான காரணம்..
பள்ளிக்கூடம் நிறுவ காரணம்?
பல ஆண்டுகளுக்கு முன், ஹஜ்ஜப்பாவிடம் பழங்கள் வாங்குவதற்காக வந்த ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணி ஆரஞ்சு பழத்தின் விலை என்ன என கேட்டிருக்கிறார். ஆனால் சுத்தமாக கல்வி வாடையே படாமல் இருந்ததால் ஒன்றும் புரியாமல் குழம்பித் தவித்த ஹஜ்ஜப்பா தான், கல்வி கற்காததை எண்ணி அன்று வருந்தினார். இதற்கு காரணம் ஹஜ்ஜப்பாவின் கிராமத்தில் பள்ளிக் கூடம் இல்லாததே ஆகும்.
அவரின் கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லாததால் அவர் மட்டுமல்ல அவரின் கிராமத்து சிறுவர்கள் யாருமே கல்வி பயில வாய்ப்பு இல்லாமல் போனது. அன்றே அவர் தன்னை போல தனது கிராமத்தினர் வருந்தக் கூடாது என நினைத்து ஒரு பள்ளியை கட்ட தீர்மானித்தார்.
Also read:
தேவருக்கு அவமதிப்பு.. நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு – அர்ஜூன் சம்பத் அறிவிப்பால் சர்ச்சை
தினசரி தான் பெற்று வந்த சொற்ப வருமானத்தில், வருடக்கணக்கில் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து 2000வது ஆண்டில் ஒரு ஏக்கரில் ஒரு சிறிய பள்ளியை தொடங்கினார் அவர். இன்று அவருடைய பள்ளியில் 175 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இங்கு 10ம் வகுப்பு வரை படிக்கும் வசதி உள்ளது.
ஹஜ்ஜப்பாவுக்கு மட்டும் அன்றைய தினம் மனமாற்றம் ஏற்படாமல் இருந்திருந்தால் இன்று இத்தனை மாணவர்கள் கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டிருக்குமா என்பது கேள்வியே..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.