550 ஹெக்டேர் காட்டை உருவாக்கியிருக்கிறார் பேயங். தரிசு மணல் பகுதியில், அடர்த்தியான ஒரு காட்டையே உருவாக்கிய ’Forest man of India' என்று அழைக்கப்படும், அசாமைச் சேர்ந்த 57 வயது விவசாயி ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு அமெரிக்க பாடப்புத்தகங்களில் பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரிஸ்டெல் கனெக்டிக்கட்டில் இருக்கும் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் அசாம் ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. அங்குள்ள மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வியில் ஒரு பகுதியாக ஜாதவின் சாதனைகளைக் குறித்து படிக்கிறார்கள் என அங்கு பணிபுரியும், இந்திய வம்சாவளி ஆசிரியர் நவாமி சர்மா தெரிவித்திருக்கிறார்.
கிழக்கு அசாமில் உள்ள மஜூலித் தீவின் சுற்றுச்சூழல் கெடுதலைக் குறித்து சிறுவயதிலேயே கவலைகொள்ளத் தொடங்கிய ஜாதவ் பயேங், மரங்களை நடத்தொடங்கி காடுகளாக வளரும் வகையில் தன் ஈடு இணையற்ற உழைப்பைச் செலுத்தி காட்டை உருவாக்கியுள்ளார். யானை, காண்டாமிருகம், புலி என பல விலங்கினங்களும் அக்காட்டுப் பகுதிக்குள் வாழத்தொடங்கிவிட்டன.
பத்மஸ்ரீ பட்டத்துடன், கர்மயோகி விருது வென்றவர் ஜாதவ் பயேங் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assam, Environment, Forest deforestation, Jadhav payeng