புயல்கள் அதிகரிக்கும், வெப்ப அலைகளின் வீரியம் கூடும், மழை குறையும்... நூற்றாண்டின் இறுதியில் என்னவாகும் இந்தியா?

கோப்பு படம்

எதிர்காலத்தில் இந்தியா எதிர்கொள்ளவுள்ள சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் மாற்றங்கள் என்ன? என்பது குறித்து 12 தொகுதிகளாக Assessment of Climate Change over the Indian Region இவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
இந்திய துணைக்கண்டத்தின் ஒட்டுமொத்த பகுதியிலும் காலநிலை எந்தளவிற்கு மாறியுள்ளது. இதன் தாக்கத்தால் தற்போது மற்றும் எதிர்காலத்தில் இந்தியா எதிர்கொள்ளவுள்ள சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் மாற்றங்கள் என்ன? என்பது குறித்து 12 தொகுதிகளாக Assessment of Climate Change over the Indian Region இவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்

• இந்தியாவின் சராசரி வெப்பநிலை 1901 முதல் 2018 வரையிலான காலத்திற்கிடையே 0.7 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இந்த உயர்விற்கு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் மற்றும் நிலப்பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக உள்ளது.

• 21ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் சராசரி வெப்பநிலையானது 4.4 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருக்கும்.• இந்த நூற்றாண்டின் இறுதியில் மிக வெப்பமான பகல் நாட்களின் எண்ணிக்கை 55விழுக்காடும், மிக வெப்பமான இரவு நாட்களின் எண்ணிக்கை 70 விழுக்காடும் உயர வாய்ப்புள்ளது.

• கோடைகாலத்தில் ஏற்படும் வெப்ப அலைகள் வீசும் நிகழ்வானது  தற்போது இருப்பதை விட 3 முதல் 4 மடங்கு அதிகரிக்கும். வெப்ப அலைகள் வீசும் காலமும் இரண்டு மடங்காக அதிகரிக்கும். இதன் காரணமாக கங்கை மற்றும் சிந்து நதி வடிநிலப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவக்கூடும்.• இந்திய பெருங்கடலின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலையானது 1951 முதல் 2015 இடைப்பட்ட காலத்தில் 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இது சர்வதேச கடல் வெப்பநிலை உயர்வான 0.7ஐ விட அதிகமாகும். இந்திய கடற்பகுதியானது கடந்த அறுபதாண்டுகளில் கடைசி இறுபதாண்டுகளில் அதிக வெப்பமடைந்துள்ளது.

• ஜீன் முதல் செப்டம்பர் வரையில் பெய்யும் கோடை பருவமழையானது 1951 முதல் 2015 இடைப்பட்ட காலத்தில் 6% குறைந்துள்ளது. குறிப்பாக கங்கைச் சமவெளியிலும், மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதியிலும் மழைப்பொழிவு குறைந்துள்ளது.• மத்திய இந்தியாவில் கன மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கையானது 1950 முதல் 2015 இடைப்பட்ட காலத்தில் 75 % அதிகரித்துள்ளது.

• கடந்த 70 ஆண்டுகளாக கோடைகால பருவமழையில் ஏற்பட்ட குறைவானது அதிக வறட்சியை ஏற்படுத்தியுள்ளது. 1951 முதல் 2016 இடைப்பட்ட காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மற்றும் அதிக காலம் நீண்ட வறட்சி நிகழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

• குறிப்பாக மத்திய இந்தியா, தென்மேற்கு கடற்கரை, தென்னிந்திய தீபகற்பம் மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் பத்தாண்டுகளில் 2 வறட்சி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.ஒவ்வொரு பத்தாண்டும் வறட்சியால் பாதிக்கப்படும் பரப்பளவானது 1.3 விழுக்காடு அதிகரிக்கிறது.• வட இந்திய கடற்பகுதியில் 1874 முதல் 2004 இடைப்பட்ட காலத்தில்  கடல் நீர்மட்ட உயர்வானது ஒவ்வொரு ஆண்டிற்கும் 1.06 முதல் 1.75 மில்லிமீட்டராக உள்ளது. இதுவே கடந்த 25 ஆண்டுகளில் ஆண்டிற்கு 3. 3 மில்லிமீட்டர் உயர்வாக உள்ளது.

• அதி தீவிர புயல்களின் எண்ணிக்கை ஒரு பத்தாண்டிற்கு ஒரு புயல் எனும் அளவில் உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் புயல்கலின் தீவிரத்தன்மை அதிகரிக்கக்கூடும்.

• இந்து குஷ் பனிப்பிரதேசத்தில் 1951 முதல் 2014 இடைப்பட்ட காலத்தில் சராசரி வெப்பநிலையானது 1.3 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதியின் சராசரி வெப்பநிலை 5.2 டிகிரி செல்சியசாக உயரக்கூடும்.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்த கொள்கை முடிவெடுக்கக் கூடியவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்த ஆவணம் பெரும் உதவியாக இருக்கும் என்று புவி அறிவியல் துறை செயலாளர் ராஜீவன் மாதவன் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையானது வருகிற வெள்ளிக்கிழமை புவி அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனால் வெளியிடப்படவுள்ளது.

மேலும் படிக்க...

வாகனங்களில் சுற்றித் திரிந்தால்... ஊரடங்கு மீறல் நடவடிக்கை குறித்த சென்னை காவல்துறையின் அறிவிப்புகள்..
Published by:Vaijayanthi S
First published: