முகப்பு /செய்தி /இந்தியா / வங்கக்கடலில் புயல் - ஒடிசாவில் கரையை கடக்கிறது

வங்கக்கடலில் புயல் - ஒடிசாவில் கரையை கடக்கிறது

புயல் (கோப்புப் படம்)

புயல் (கோப்புப் படம்)

  • Last Updated :

ஒடிசாவில் இன்று புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று தீவிரக்காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலானது வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து இன்று கலிங்கபட்டிணம் கேபால்பூர் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படடுள்ளனர். புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில்  காற்கு வீசக்கூடும் என்பதால் முன்னெச்சரி்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக கஞ்சாம், பூரி மாவட்டங்களுக்கு அதிகபட்ச அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே போல், கஞ்சாம், கோர்தா, நயகார்க், பூரி, கணபதி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் விடுமுறைகளை ரத்து செய்து முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் மாவட்ட நிர்வாகங்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

First published:

Tags: Cyclone, Odisha, Storm in Odisha, Weather Forecast