• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் - ராகுல்காந்தி

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் - ராகுல்காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 30 லட்சத்தை தாண்டியுள்ளது.  24 மணி நேரத்தில் 780 பேர் பலியாகி உள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 61 ஆயிரத்து 899 பேர் குணமடைந்துள்ளதால், மீண்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 19 லட்சத்தை கடந்துள்ளது.

    பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி இருப்பு இல்லை என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,தேவைப்படும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தடுப்பூசி போடும் பணிகள் நத்தை வேகத்தில் நகர்வதாக குறிப்பிட்டுள்ள அவர், மூன்று மாதங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான மக்களுக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    போதுமான தடுப்பு மருந்துகள் இருப்பு உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை 9 கோடியே 43 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறினார்.

    சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாடு முழுவதும் சராசரியாக ஐந்தரை நாட்களுக்கு தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அதிகளவில் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கடலாம் என்ற அச்சத்தில், மும்பையில் இருந்து ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: