ஹோம் /நியூஸ் /இந்தியா /

சரசரவென சரிந்த கல்குவாரி.. பாறைக்குள் சிக்கிய தொழிலாளர்கள்.. பகீர் சம்பவம்!

சரசரவென சரிந்த கல்குவாரி.. பாறைக்குள் சிக்கிய தொழிலாளர்கள்.. பகீர் சம்பவம்!

மிசோரத்தில் கல்குவாரி சரிந்து விபத்து.

மிசோரத்தில் கல்குவாரி சரிந்து விபத்து.

குவாரியில் தொழிலாளர்கள் கற்களை உடைத்து சேகரிக்கும் போது குவாரியில் உள்ள தளர்வான மண் சரிந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mizoram, India

  தெற்கு மிசோராமின் ஹனாதியால் கிராமத்தில் உள்ள கல்குவாரி திங்கள்கிழமை மாலை பல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது இடிந்து விழுந்தது.

  இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், 10க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளை அகற்ற சிறிது நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  காணாமல் போன தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் மிசோரத்தை சேர்ந்ந்தவர்கள் அல்ல. அவர்கள் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்வதற்காக வெளி மாநிலங்களில் இருந்து மிசோரத்திற்கு வந்தவர்கள்.

  ஏபிசிஐ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலைக்கு சொந்தமான மவுதார் கிராமத்தில் உள்ள குவாரியில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது நேற்று பிற்பகலில் இந்த சம்பவம் நடந்தது என்று, போலீஸ் சூப்பிரண்டு வினீத் குமார் செய்தி நிறுவனமான PTI இடம் தெரிவித்தார்.

  இதையும் படிங்க : காட்டில் தொலைந்த நபரை சல்லடைபோட்டு தேடிய மக்கள்.. அசால்டாக கண்டுபிடித்த செல்ல நாய்!

  குவாரியில் தொழிலாளர்கள் கற்களை உடைத்து சேகரிக்கும் போது குவாரியில் உள்ள தளர்வான மண் சரிந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது எப்படி நடந்தது என்பது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

  சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ஹ்னாதியால் மாவட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த யங் மிசோ அசோசியேஷன் (ஒய்எம்ஏ) தன்னார்வலர்களும் மீட்புப் பணிகளில் உதவ சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

  போலீசாரின் கூற்றுப்படி, தொழிலாளர்களில் ஒருவர் அந்த சம்பவத்தில் இருந்து தப்பியுள்ளார். மேலும் 12 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், இதுவரை யாரும் மீட்கப்படவில்லை.

  நேற்று மாலையில் இருந்து லாரிகள், மண் தோண்டும்  இயந்திரங்கள் கொண்டு இரவு பகலாக மீட்புப் பனி நடைபெற்று வருகிறது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Mizoram, Quarry