கல் வீச்சில் ஈடுபடுவோரை சுட்டுக் கொல்ல வேண்டும் – பாஜக எம்.பி.

news18
Updated: June 12, 2018, 5:32 PM IST
கல் வீச்சில் ஈடுபடுவோரை சுட்டுக் கொல்ல வேண்டும் – பாஜக எம்.பி.
பாஜக எம்.பி. டி.பி.வாட்ஸ்
news18
Updated: June 12, 2018, 5:32 PM IST
ஜம்மு – காஷ்மீரில் கல் வீச்சில் ஈடுபடுவோரை சுட்டுக்கொல்ல வேண்டும் என பாஜக எம்.பி., டி.பி.வாட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

இந்நிலையில், இங்குள்ள பாதுகாப்புப் படையினர் மீது இளைஞர்கள் உள்ளிட்டோர் அவ்வப்போது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம். இதுதொடர்பாக, சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்குகளை திரும்ப பெறுவது என மாநில அரசு முடிவு செய்தது. அண்மையில் காஷ்மீருக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலத்தில் கல் வீச்சில் ஈடுபட்டோர் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என உறுதி அளித்தார்.

இந்நிலையில், மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., டி.பி.வாட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாட்ஸ் கூறுகையில், கல்வீச்சில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளை திரும்ப பெறுவதற்கு பதிலாக, அவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றார். வாட்ஸின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
First published: June 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...