அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்காக இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட இடத்தில் இருந்து கொண்டுவரப்படும் கல்!

சீதா எலியா

இலங்கையின் நுவரா எலிய எனும் மாகாணத்தில் சீதையம்மன் கோவில் அமைந்துள்ளது. சீதா எலியா எனப்படும் அங்கு தான் ராவணன் சீதையை சிறை வைத்ததாக நம்பப்படுகிறது.

  • Share this:
இலங்கையில் உள்ள சீதா எலியா எனப்படும் சீதையம்மன் கோவிலில் இருந்து பூஜை செய்யப்பட்ட சிறப்பு கல், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக கொண்டு வரப்படுகிறது.

ராமர் புராணத்தில் முக்கியமான பாகமாக இருப்பது இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்டது தான். சீதையை ராவணன், சிறை வைத்ததால் தான் ராவணணுக்கும், ராமருக்கும் போர் நடைபெற்றது என்பதே புராணம். இந்த நிலையில் இலங்கையின் நுவரா எலிய எனும் மாகாணத்தில் சீதையம்மன் கோவில் அமைந்துள்ளது. சீதா எலியா எனப்படும் அங்கு தான் ராவணன் சீதையை சிறை வைத்ததாக நம்பப்படுகிறது. இது அசோகவனம் என்றும் அழைக்கப்படுகிறது.

சீதா எலியா


சீதா எலியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த போது தினமும் இராமணை நினைத்து இங்கிருந்தபடி இராமர் தன்னை மீட்டுச் செல்ல வேண்டும் என்று வேண்டுதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த மலையில் மீது காணப்படும் தடங்கள் யாவும் ஹனுமனின் காலடித் தடங்கள் என்றும் நம்பப்படுகிறது.

இந்த நிலையில் சீதையம்மன் கோவிலில் இருந்து சிறப்பு கல் ஒன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக கொண்டு வரப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அயோத்தியில் ராமர் கோவிலுக்காக சீதா எலியாவில் இருந்து கொண்டு வரப்படும் கல், இலங்கை - இந்திய உறவின் வலிமையான தூணாக இருக்கும்.” என தெரிவித்துள்ளது.

முன்னதாக மயூர்பதி அம்மன் கோவிலில் இக்கல்லை இந்தியாவிற்கான இலங்கை தூதர் மிலிண்டா மொரகோடா பெற்றுக்கொண்டார். இந்த கல் விரைவில் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.s
Published by:Arun
First published: