அரசுப்பேருந்தை திருடி, காயலான் கடையில் ரூ.60 ஆயிரத்துக்கு விற்ற கொள்ளையர்கள்!

பேருந்தின் பாகங்கள், பேருந்தை உடைக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், ஒரு ஆட்டோ, 13 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அரசுப்பேருந்தை திருடி, காயலான் கடையில் ரூ.60 ஆயிரத்துக்கு விற்ற கொள்ளையர்கள்!
திருடப்பட்ட பேருந்து
  • News18
  • Last Updated: April 27, 2019, 8:45 PM IST
  • Share this:
தெலங்கானா மாநிலத்தில் அரசுப்பேருந்தை திருடி விற்பனை செய்ய முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை கடந்த 24 ம் தேதி இரவு 12 மணி அளவில் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

பேருந்து டிரைவர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் உடனடியாக திருடிச் செல்லப்பட்ட பேருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.


இதற்காக பேருந்து நிலையம் மற்றும் நகரில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாந்தேடு பகுதியை நோக்கி பேருந்தை திருடியவர்கள் ஓட்டி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து நாந்தேடு போலீசாரின் உதவியுடன் ஹைதராபாத் போலீசார் நடத்திய விசாரனைனையில், நாந்தேடில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பொக்கர் எனும் ஊரில் உள்ள காயலான் கடையில் பேருந்து விற்பனை செய்யப்பட்டது. தெரியவந்தது.

அங்கு சென்ற போலீசார் பேருந்தின் பாகங்கள், பேருந்தை உடைக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், ஒரு ஆட்டோ, 13 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

Loading...

பேருந்தை திருடி ஓட்டிச் சென்ற ஹைதாராபாத்தை சேர்ந்த சகோதரர்களான சையது அபேத், சையது ஜிகாத் ஆகியோரையும்,பொக்காரில் காயலான் கடை நடத்தும் அவர்களது உறவினர்களான முகமது நவீத், அப்சல் கனி மற்றும் காயலான் கடை ஊழியர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

First published: April 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...