போபர்ஸ் விவகாரத்திலும் இதே நிலைப்பாடு எடுப்பீர்களா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

போபர்ஸ் விவகாரத்திலும் இதே நிலைப்பாடு எடுப்பீர்களா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
ரஃபேல் விமானம்
  • News18
  • Last Updated: March 6, 2019, 11:14 PM IST
  • Share this:
 ரஃபேல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று கூறும் உங்களால், போர்பஸ் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று கூறமுடியுமா? என்று அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதுதொடர்பாக மேல்கட்ட விசாரணை வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் டிசம்பர் 14-ம் தேதி தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ரபேல் ஓப்பந்தம் தொடர்பான முக்கிய அம்சங்களைக் கணக்கில் கொள்ளாமல் அவை மறைக்கப்பட்டு இதுதொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார்.


இதுதொடர்பாக விளக்கமளித்த மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால், ‘ரஃபேல் ஒப்ந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து திருடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்கள், ஊடக நிறுவனம் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, அதனை ஆதாரமாகக் கருதக் கூடாது. வேறு எந்த நாட்டிலும் ராணுவ விவகாரங்களை நீதிமன்றங்களில் விசாரணை செய்வது கிடையாது. இங்கு மட்டுமே ராணுவ ஒப்பந்தங்களை நீதிமன்றம் விசாரணை செய்கிறது’ என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், ‘விசாரணை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று மனுவில் தேசப் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் உள்ளே வரவில்லை.

இந்த ஆதாரங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறும் வாதத்தத்தை சரியான வாதமாக எடுக்க முடியாது. போர்பஸ் விவகாரத்திலும் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விவகாரத்திலும் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று உங்களால் கூற முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர், அந்த வழக்கு மார்ச் 14-ம் தேதிக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 
First published: March 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading