அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம்: இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளருக்கு ரூ.3 லட்சம் கோடி இழப்பு

மாதிரிப்படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

  அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 3 விழுக்காடு விலை உயர்ந்து 70 டாலர்களை எட்டியுள்ளது. அதன் காரணமாக காலை முதலே பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி காணப்பட்டது.

  சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 788 புள்ளிகள் சரிந்து 40 ஆயிரத்து 676 புள்ளிகளானது. நிப்டியும் 233 புள்ளிகள் சரிவைச் சந்தித்து 11 ஆயிரத்து 993 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

  சென்செக்சின் 30 பங்குகளில் இரண்டைத் தவிர 28 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. எச்டிஎப்சி, டாடா ஸ்டீல்ல் ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 2 முதல் 3 விழுக்காடு வரை சரிவைச் சந்தித்தன. பங்குகளின் விலை சரிவால் முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

  Also see:

  Published by:Karthick S
  First published: