இரண்டாவது ஆலை அமைக்கும் பணியை கைவிட்டது ஸ்டெர்லைட்!

news18
Updated: July 1, 2019, 1:42 PM IST
இரண்டாவது ஆலை அமைக்கும் பணியை கைவிட்டது ஸ்டெர்லைட்!
கோப்புப் படம்
news18
Updated: July 1, 2019, 1:42 PM IST
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இரண்டாவது ஆலை அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், அதனை திரும்பப் பெற்றுக்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு அளித்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக, அந்நிறுவனம் சார்பில் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இரண்டாவது ஆலை அமைக்க பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில், அதனை திரும்ப பெற்றுக்கொள்வதாக மனு அளித்துள்ளது.

இரண்டாவது ஆலை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், அதனை திரும்ப பெற்றுக்கொள்வதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு கொடுத்துள்ளது

ஆர்.டி.ஐ மூலம் நெல்லை வழக்கறிஞர் முத்துராமன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் மேற்கண்ட பதிலை அளித்துள்ளது.

First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...