Home /News /national /

ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதி வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்..

ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதி வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்..

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதால் தான் ஆலை மூடப்பட்டுள்ளதாகவும், ஆவணங்களை ஆராய்ந்த பிறகே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதி மறுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 3 மாதங்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    இந்த மனு நீதிபதி ரோஹின்டன் நாரிமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்தியாவில் 36 சதவீத காப்பர் தேவையை வேதாந்தா நிறுவனம் பூர்த்தி செய்ததாகவும், ஆலை மூடியதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.



    பின்னர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதால் தான் ஆலை மூடப்பட்டுள்ளதாகவும், ஆவணங்களை ஆராய்ந்த பிறகே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதி வழங்க முடியாது என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தார்.
    Published by:Gunavathy
    First published:

    Tags: Sterlite, Sterlite plant, Supreme court

    அடுத்த செய்தி