ஹோம் /நியூஸ் /இந்தியா /

உதடுகள் தைக்கப்பட்டு கை கால்களை கட்டி ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட முதியவர் - வளர்ப்பு மகனின் கொடூர செயல்

உதடுகள் தைக்கப்பட்டு கை கால்களை கட்டி ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட முதியவர் - வளர்ப்பு மகனின் கொடூர செயல்

ரயில்வே தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட முதியவர்

ரயில்வே தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட முதியவர்

ரயில்வே தண்டவாளத்தில் உள்ள ஸ்லீப்பர் கட்டையுடன் முதியவரை கட்டிப்போட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

முதியவர் ஒருவர் வாய்  தைக்கப்பட்ட நிலையில் ரயில்தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உதடுகள் தைக்கப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் கட்டப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் இருப்பதைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தெரிவித்தனர். விரைந்த வந்த போலீஸார் அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். வாய்ப்பகுதி தைக்கப்பட்டிருந்ததால் மருத்துவர்கள் அதனை அகற்றி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிகிச்சையில் இருக்கும் முதியவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: அத்தையைக் கொன்ற இளைஞர்.. இளைஞரைக் கொன்ற மாமா.. இரட்டைக் கொலையால் கிராமமே அதிர்ச்சி

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட முதியவரின் பெயர் போலா ராம். இவருக்கு 65 வயது. பாலாமு மாவட்டம் பிதிஹாரா கிராமத்தைச் சேர்ந்தவர். முதியவரை அவரது வளர்ப்பு மகன் மற்றும் இருவர் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளது. அதோடு நில்லாமல் முதியவரின் வளர்ப்பு மகன் கயிற்றைக் கொண்டு இவரது உதடுகளை தைத்துள்ளார். கை கால்களை கட்டி ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துசென்றுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரயில்வே தண்டவாளத்தில் உள்ள ஸ்லீப்பர் கட்டையுடன் முதியவரை கட்டிப்போட்டுள்ளார். ரயிலில் முதியவர் அடிப்பட்டு சாகட்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்துள்ளனர். இரவு 11 மணியளவில் தண்டவாளத்தை விட்டு அந்த மூவரும் சென்றுள்ளனர். அதிகாலையில் முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் கட்டப்பட்டிருப்பதை பார்த்த உள்ளூர்வாசிகள் எங்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தோம்.நல்ல வேளையாக இந்த தடத்தில் ரயில் எதுவும் வரவில்லை. அதனால் முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்” என்றனர்.

Also Read:  ஏடிஎம் வருபவர்களுக்கு உதவுவது போல் நாடகம் - தேனியில் பணத்தை சுருட்டி வந்த இளைஞர் போலீசில் சிக்கினார்

போலா ராமின் இரண்டாவது மனைவிக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பாக கூறப்படுகிறது. அவரது முதல் மனைவி 2010-ம் ஆண்டு காலமானார். இரண்டாவது மனைவியுடன் இவருக்கு தகராறு இருந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் பஞ்சாயத்து வரை சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Railway, Train