Home /News /national /

பீர் ரூ.10, குவாட்டர் ரூ.20... மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்வு

பீர் ரூ.10, குவாட்டர் ரூ.20... மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்வு

மதுக்கடை

மதுக்கடை

அனைத்து ‘பீர்’ வகைகளும் ஒரு பாட்டிலுக்கு குறைந்தது ரூ.10 முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததை அடுத்து டாஸ்மாக் கடைகள் படிபடியாக திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளின் நேரம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் வழக்கமான மதியம் 12 முதல் இரவு 10 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் மார்ச் மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை 10 முதல் 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மதுபான விலை ஏற்றம் மது பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தை போல் தெலங்கானாவிலும் தற்போது மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் ஆண்டு வருவாய் ரூ.6000 முதல் ரூ.7000 கோடி வரை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    also read :  இதை உடனே நீங்க செய்யாவிட்டால் ரேஷன் கார்டு இனி செல்லாது

    அந்தவகையில், ரூ.495 மதிப்பிலான 1,000 மி.லி அளவு கொண்ட மதுபாட்டிலின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.615 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், அனைத்து குவாட்டர் மதுபாட்டிலின் விலையும் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. மேலும், அனைத்து ‘பீர்’ வகைகளும் ஒரு பாட்டிலுக்கு குறைந்தது ரூ.10 முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    தெலங்கானாவில் மாநில அரசு தனது வருவாயை அதிகரிக்க எடுத்த தொடர் நடவடிக்கைகளில் மதுபான விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. தெலங்கானா அரசு சமீபத்தில் நிலங்களின் சந்தை மதிப்பு, சொத்து பதிவு கட்டணம், பேருந்து கட்டணம் மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியது. தெலங்கானாவில் கடைசியாக 2020-ம் ஆண்டு மே மாதம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Telangana

    அடுத்த செய்தி