Home /News /national /

''தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்'' : டெல்லி முதல்வரின் புத்தாண்டு வாழ்த்து

''தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்'' : டெல்லி முதல்வரின் புத்தாண்டு வாழ்த்து

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளன. அண்டை மாநிலமான கேரளாவில் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

    டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேவையில்லாமல் மக்கள் வெளியே வரக்கூடாது என்று கூறியுள்ளார்.

    இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளன. அண்டை மாநிலமான கேரளாவில் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

    2 நாட்களுக்கு முன்பாக கொரோனா பரவல் தடுப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் பின்வரும் முக்கிய கட்டுப்பாடுகளை விதித்தார். இதன்படி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் மூடப்படும். வார இறுதி ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படாது.

    சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் திறந்திருக்கும். கட்டுமானப் பணிகளுக்கு தடை இல்லை. காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் திறக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை பார்களும் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படும்.

    விருந்து மண்டபம், ஆடிட்டோரியம் மூடப்படும். ஹோட்டல்கள் திறந்திருக்கும். ஆனால் ஹோட்டலுக்குள் விருந்து மற்றும் கூட்டம் நடத்தும் அரங்குகள் மூடப்பட்டிருக்கும். ஸ்பாக்கள், ஜிம்கள், யோகா நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டிருக்கும்.

    வெளிப்புற யோகா அனுமதிக்கப்படும். டெல்லி மெட்ரோ 50% இருக்கை வசதியுடன் இயங்கும். பயணிகள் நின்று பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் 50% இருக்கை வசதியுடன் இயக்கப்படும்

    ஆட்டோ, இ ரிக்‌ஷா, டாக்ஸி மற்றும் சைக்கிள் ரிக்‌ஷாவில் 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். தேசிய அல்லது சர்வதேச விளையாட்டுகளை நடத்தலாம்.

    இதையும் படிங்க : பாஜகவில் இணைந்த கிரிக்கெட் பிரபலம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

    விளையாட்டு வளாகங்கள், மைதானங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் மூடப்படும். பொது பூங்காக்கள் திறந்திருக்கும். திருமண விழா மற்றும் இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சமூக, அரசியல், மத, திருவிழா மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நடவடிக்கைகள் தடை செய்யப்படும்.

    மத வழிபாட்டு தலங்கள் திறந்திருக்கும். ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூடப்படும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 50% பணியாளர்களுடன் தனியார் அலுவலகத்தை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    தற்போது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

    இதையும் படிங்க : இந்தியாவில் மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி

    டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை உங்களது டெல்லி அரசு சிறப்பான முறையில் கட்டுப்படுத்தி வருகிறது. தனிப்பட்ட முறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நான் கவனித்து வருகின்றேன்.

    தேவையில்லாமல் வெளியே செல்வதை டெல்லி மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி செல்ல வேண்டும் என்றால் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் இந்த புத்தாண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக அமைவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொரோனா பேரழில் இருந்து இந்தியாவும், உலகமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
    இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க : டெல்லியில் ஆயிரக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் - வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு
    Published by:Musthak
    First published:

    Tags: Arvind Kejriwal

    அடுத்த செய்தி