நாட்டில் பிரபலமாக இருக்கும் ஸ்டாக் ப்ரோக்கர் நிறுவனமான Zerodha-வின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வான நிதின் காமத், வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு சில மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
மாணவர்கள் தன்னிடம் எப்போதெல்லாம் ஆலோசனை கேட்கிறார்களோ அப்போதெல்லாம், , எதிர்காலத்தில் உள்நாட்டிலேயே சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் இந்தியாவிலே இருக்குமாறு கேட்டு கொள்வதாக சோஷியல் மீடியாவான ட்விட்டரில் Zerodha-வின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வான நிதின் கூறி இருக்கிறார். திறமையான இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு தங்களின் அறிவை வழங்குவது இந்தியா எதிர் கொண்டுவரும் நீண்டநாள் பிரச்சனையாக இருக்கிறது. இந்திய மாணவர்கள் உயர்ந்த மற்றும் சிறந்த வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு இடம்பெயர விரும்புகின்றனர்.
இந்த சூழலில் தனது இந்த அறிவுரை உயர் பணித்திறனும் கல்வித் தகுதியும் உடையவர்கள் மேம்பட்ட பணி சூழலும், மிகுதியான ஊதியமும் கிடைக்க வாய்ப்புள்ள நாட்டிற்கு சென்று பணிபுரிவதை தடுக்க நினைப்பதற்கானது அல்லது நாட்டிற்கு ஒரு கடமை இருக்கிறது என்பதற்காகவோ அல்ல. மாறாக எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு பல வாய்ப்புகள் உருவாக போகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
Read More : அக்னிபத் திட்டம் மூலம் 3000 வீரர்கள் கடற்படையில் சேர்ப்பு - தளபதி ஹரி குமார் தகவல்
எதிர்காலத்தில் இந்தியா பல்வேறு சிறந்த வாய்ப்புகளை பெறும் என்பதால் தான், உள்நாட்டில் இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க அறிவுறுத்துகிறேன் என்று ட்விட் செய்துள்ளார் நிதின் காமத். அறிவு மற்றும் நெட்வொர்க் குட்ஸ் பொருளாதாரத்தில் (knowledge and network goods economy) இந்திய இளைஞர்கள் மிகப்பெரிய நுகர்வோர் மற்றும் லேபர் சோர்ஸாக இருப்பார்கள் என்ற பிரபல பொருளாதார வல்லுநர் ஸ்ருதி ராஜகோபாலனின் அறிக்கையையும் அவர் ஷேர் செய்து உள்ளார்.
Whenever students ask me for advice, I say, stay in India. Not just because we need to avoid the brain drain or that there's an obligation to the country, but because India will most likely have the best opportunities in future.@SRajgopalan explains👇 1/2https://t.co/UYz5aEd9wW
— Nithin Kamath (@Nithin0dha) November 30, 2022
ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் உள்ள மெர்கடஸ் மையத்தில் பொருளாதார நிபுணராக இருக்கும் இருக்கிறார் ஸ்ருதி ராஜகோபாலன். ஸ்ருதி ராஜகோபாலனின் அறிக்கையோடு ஐ.நா மக்கள்தொகை கணிப்புகளையும் காமத் சுட்டிக்காட்டி உள்ளார். மற்றொரு ட்விட்டில் இதுபற்றி கூறி இருக்கும் நிதின் காமத் உலகளவில் 25 வயதிற்குட்பட்ட ஐந்தில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருப்பதை சுட்டிக்காட்டி உள்ள நிதின் காமத், அதே போல இந்தியர்களில் 47% பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்பதையும் கோடிட்டு காட்டி உள்ளார். இந்த இந்திய இளைஞர் குழு சில தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளது என்று கூறினார். இந்த தனித்துவ பண்புகளில் முக்கியமானது நம் நாட்டின் இளைஞர்கள் குழு உலகளாவிய லட்சியங்களைக் கொண்ட டிஜிட்டல் நேட்டிவ்ஸ் கல்வி பெற்றவர்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதனிடையே நிதின் காமத்தின் இந்த ட்விட்டுக்கு கருத்து தெரிவித்துள்ள சில யூஸர்களில் ஒருவர், இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. ஆனால், இங்கு வரி செலுத்துவோர் மதிக்கப்படுவதில்லை. வரி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாங்கள் உழைத்து சம்பாதிப்பது அனைத்தையும் வாரியாக கொடுக்க முடியாது. நான் வெளிநாட்டிற்குச் செல்ல அதிகம் யோசிக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளது ஒரு விவாதத்திற்கு வழிவகுத்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.